MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருச்சியில் சாமி தரிசனம்.. ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி எங்கெல்லாம் போறாரு? இதெல்லாம் லிஸ்ட்ல இருக்கு!

திருச்சியில் சாமி தரிசனம்.. ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி எங்கெல்லாம் போறாரு? இதெல்லாம் லிஸ்ட்ல இருக்கு!

3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரம் சென்றுள்ளார்.

2 Min read
Author : Raghupati R
| Updated : Jan 20 2024, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
PM Modi Rameswaram Visit

PM Modi Rameswaram Visit

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை தமிழகம் வந்த பிரதமர், சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

27
PM Modi

PM Modi

இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்ற பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பஞ்சகரை சாலைக்கு சென்று அங்கிருந்து சாலை மார்கமாக ஸ்ரீரங்கம் கோயிலை அடந்தார். முற்பகல் 11 மணி முதல் 12.30 மணி வரை சாமி தாரிசனம் செய்தார். தெற்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது.

37
PM Modi At Rameswaram

PM Modi At Rameswaram

தொடர்ந்து கருடாழ்வார் மூலவர் தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார். ஆண்டாள் யானை பிரதமருக்கு மவுத் ஆர்கன் வாசித்துக் காண்பித்தது. தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தைக் கேட்டார்.

47
PM Modi Tamil Nadu Visit

PM Modi Tamil Nadu Visit

பிரதமர் தமிழ் கலாச்சார உடையான வேஷ்டி சட்டையில் இருந்தார். பிரதமரின் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமரின் சாமி தரிசனத்தை முன்னிட்டு பகல் 2.30 மணி வரை பொது மக்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

விபீஷணன் - இலங்கை - ஸ்ரீரங்கம்.. ஸ்ரீராமரால் வழிபட்ட கடவுளை வணங்கிய பிரதமர் மோடி - இந்த வரலாறு தெரியுமா?

57
Ranganathaswamy Temple

Ranganathaswamy Temple

சாமி தரிசனத்துக்காக சாலை வழியாக பிரதமர் வந்தபோது சாலைகளின் இரு புறங்களிலும் மக்கள் கூடி நின்று பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராமேசுவரம் கோவிலில் இன்று தரிசனம் செய்கிறார்.

67
PM Modi In Sri Rangam

PM Modi In Sri Rangam

அதன் பிறகு கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார்.

77
Trichy Sri Rangam

Trichy Sri Rangam

பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார். அதன் பின்னர், 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்கிறார் பிரதமர் மோடி. பிரதமரின் வருகையோடு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமர் படம் போட்ட புதிய 500 ரூபாய் நோட்டு - இணையத்தில் வைரல்.. உண்மையா? பொய்யா? முழு விபரம் இதோ!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரதமர் மோடி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved