Cinema : 1 நாளுக்கு 3 லட்சம் சம்பளம்.. அப்போ ஒரு படத்துக்கு? இந்தியாவின் Costly Stunt Master யார் தெரியுமா?

Stunt Director : ஒரு திரைப்படம் என்பது இயக்கம், தயாரிப்பு, சண்டை, இசை மற்றும் படத்தொகுப்பு என்று 20க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைத்த முயற்சி தான்.

Kollywood peter hein one of the high paid stunt directors see what is his salary ans

அந்த வகையில் ஒரு சினிமா உருவாக உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உழைக்கும் பல துறைகளுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பனையம் வைத்து செயல்படும் ஒரு துறை தான் ஸ்டாண்ட். கோலிவுட் உலகம் மட்டும் அல்ல, உலக அளவில் ஒரு சினிமா உருவாகும் பொழுது அதில் ஸ்டண்ட் கலைஞர்கள் தான் அதிக அளவிலான சேதத்தை எதிர் கொள்கின்றனர். 

இன்று நாம் திரையில் கண்டு ரசிக்கும் ஸ்டாண்ட் காட்சிகளுக்கு பின்னால் எவ்வளவோ சோக கதைகள் இருக்கின்றது. படப்பிடிப்பின்போது பல ஸ்டண்ட் நடிகர்கள் மரணத்தைக் கூட தழுவி இருக்கின்றார்கள் என்று கூறினால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு மிகவும் ரிஸ்க்கான துறைகளில் ஸ்டண்ட் கலைஞர்களின் துறையும் ஒன்று. 

முதல் சம்பளம் ரூ.2500.. ஆனா இன்று ஒரு படத்திற்கு ரூ.22 கோடி சம்பளம் வாங்கும் சூப்பர்ஸ்டார்.. யார் தெரியுமா?

அந்த வகையில் இந்திய சினிமாவை பொறுத்தவரை அடிமட்டத்திலிருந்து துவங்கி நின்று மாபெரும் ஸ்டண்ட் இயக்குனராக வளர்ந்து நிற்கும் ஒருவர் தான் பீட்டர் ஹெய்ன். 50 வயதை எட்டிய பீட்டர் ஹெயினுக்கு சுமார் 40 ஆண்டுகால அனுபவம் சினிமா துறையில் இருக்கிறது. புதுச்சேரியில் கடந்த 1973 ஆம் ஆண்டு பிறந்த பீட்டர் பல ஸ்டண்ட் இயக்குனர்களோடு பணியாற்றி இருக்கிறார். 

அதன் பிறகு கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மின்னலே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் ஸ்டண்ட் இயக்குனராக களமிறங்கினார். வருடத்திற்கு 10 முதல் 15 திரைப்படங்கள் வரை இவருடைய சண்டைக் காட்சி அமைப்பில் வெளிவருகிறது. இந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இவருடைய ஸ்டண்ட் அமைப்பில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. 

அதில் இந்தியன் 2, ரத்னம் மற்றும் ராயன் உள்ளிட்ட திரைப்படங்களும் அடங்கும். நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து அசத்திய பீட்டர் ஒரு படத்திற்கு ஒரு நாளுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெருகின்றாராம். அதிகபட்சமாக ஒரு படத்திற்கு 1.5 முதல் இரண்டு கோடி ரூபாய் வரை அவர் சம்பளமாக பெற்று வருகிறார். 

இருப்பினும் அவர்கள் எடுக்கும் துணிச்சலான பல முடிவுகளுக்கு இது ஏற்ற சம்பளமா என்று கேட்டால் அது முற்றிலும் கேள்விக்குறியே?. ஒரு ஸ்டண்ட் மேனாக பணியாற்றுபவர் ஒரு நாளைக்கு 12,000 ரூபாய் வரை சம்பளமாக பெறுகின்றார். அதுமட்டுமல்லாமல் அவர்கள் நடிக்கும் ரிஸ்க்கான காட்சிகளை பொறுத்து அந்த சம்பளம் கூடவும் குறையவும் செய்கின்றது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Nivedhithaa Sathish : பளிச்சென்ற கருப்பு உடை.. மயக்கும் புன்னகை.. அசத்தும் நிவேதிதா சதிஷ் - கூல் பிக்ஸ் இதோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios