திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்

திருப்பூரில் போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் இருசக்கர வானத்தில் சாகசப் பயணம் மேற்கொண்ட காதல் ஜோடிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை.

Share this Video

அண்மை காலமாக ரீல்ஸ் மோகத்தில் பைக்கில் ஸ்டண்ட் செய்து வீடியோ வெளியிடும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இளம் காதல் ஜோடி ஒன்று இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு அதனை வைரலாக்கி உள்ளனர்.

அந்த வீடியோவில் இளம் பெண் இருசக்கர வாகனத்தை ஓட்ட, காதலன் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து சாகசப் பயணம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டுதல் மற்றும் தலைக்கவசம் அணியாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கி போக்குவரத்து விதியை மீறியதால் ரூபாய் 13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Video