சூப்பர் 8 சுற்று அனைத்தும் மழையால் பாதிக்க வாய்ப்பு; இந்தியாவிற்கு சாதகமாக இருக்குமா?

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்னும் ஒருசில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் அனைத்தும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Super 8 Round matches may affected by rain in T20 World Cup 2024 rsk

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறது. ஆனால், இந்த சுற்று போட்டிகள் அனைத்தும் மழையால் பாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸில் ஆண்டிகுவா, செயிண்ட் லூசியா, பார்படாஸ், வின்செண்ட் உள்ளிட்ட 4 மைதானங்களில் நடைபெற உள்ளன.

வரும் 20 ஆம் தேதி சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதே போன்று 22 ஆம் தேதி தொடங்கும் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 24 ஆம் தேதி தொடங்கும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியிலும் கூட மழை பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த 2 போட்டியும் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று வின்செண்ட் மைதானத்திலும் 52 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆண்டிகுவாவில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் போட்டியில் 20 சதவிகித வாய்ப்பு உள்ளது. இப்படி ஒவ்வொரு அணியும் மழையின் காரணமாக பாதிக்கப்படும் நிலையில் ஐசிசி கடும் அழுத்தத்தில் உள்ளது. மழையின் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது. மேலும், டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது.

சூப்பர் 8 சுற்றில் மழையின் காரணமாக போட்டிகள் கைவிடப்பட்டால் 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். இதன் காரணமாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பாதிக்கப்படும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios