முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்தக்குவிப்பு வழக்கில் 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை நகல்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
பள்ளிக்குச் செல்ல பாதை இல்லை என்பதால் இனி பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என 5ம் வகுப்பு மாணவன் வீட்டின் முன்பு பதாகை வைத்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவுடன் அமமுக இணைவதை 90 சதவீத தொண்டர்கள் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கும் அவரை ஒன்றிணைய வாய்ப்பு இல்லை. இபிஎஸ்வுடன் சேர்ந்து பயணிப்பதில் அமமுகவில் உள்ள யாருக்கும் விருப்பமில்லை.
யாரோ ஒரு மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசியதற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பாக முடியும்? அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் யாரோ பெட்ரோல் குண்டுவீசியுள்ளனர்.
போதை இல்லாத தமிழகம் என்று முதல்வர் கூறிவரும் நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ம் வகுப்பு காலாண்டுத் தேர்வில் கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அண்ணனுக்கு பயந்து மாணவி தற்கொலை.
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆட்டை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய 3 பேரை இரவு ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ பூமிநாதன், சித்திரவேலு ஆகியோர் விரட்டிச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அருகே விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மகன் மாதேஸ்வரன். இவர் புதுக்கோட்டையில் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவன் மாதேஸ்வரன் தலைமுடி அதிகமாக வளர்த்து தாடி வைத்து வந்ததால் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பொழுது முடியையும் தாடியையும் வெட்டி விட்டு வருமாறு கூறி கண்டித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொய் குற்றச்சாட்டில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரையும் அதே பள்ளியில் பணி செய்ய அனுமதிக்குமாறு அரசுப்பள்ளி மாணவாகள் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Pudukkottai News in Tamil - Get the latest news, events, and updates from Pudukkottai district on Asianet News Tamil. புதுக்கோட்டை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.