Asianet News TamilAsianet News Tamil

பள்ளிக்கு செல்ல பாதை இல்லை; 5ம் வகுப்பு மாணவனின் செயலால் புதுக்கோட்டையில் பரபரப்பு

பள்ளிக்குச் செல்ல பாதை இல்லை என்பதால் இனி பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என 5ம் வகுப்பு மாணவன் வீட்டின் முன்பு பதாகை வைத்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

5th standard student stick poster against government officers in pudukkottai district vel
Author
First Published Nov 30, 2023, 5:14 PM IST | Last Updated Nov 30, 2023, 5:14 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் இனியவன் தற்போது 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இவரது வீட்டிலிருந்து சாலைக்குச் செல்லும் வழியில் உள்ள அன்னதானக் காவேரி என்ற காட்டாற்று வாய்க்கால் தூர்வாரப்பட்டது. இதனால் சாலைக்கு செல்ல வசதி இல்லாமல் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வாய்க்காலில் இறங்கி தான் சாலைக்கு சென்று வந்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்று கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவன் இனியன் மற்றும் அவரது தந்தை செல்வம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கி மழை பெய்து வருவதால், வாய்க்காலில் இறங்கி ஏறவும், வாய்க்காலின் கரையில் செல்வதால் மண் சரிவுறுவதோடு, நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக இருப்பதாகக் கூறி சாலை அமைத்துத் தரும் வரை தான் பள்ளிக்கு செல்லப் போவதில்லை எனக் கூறி மாணவன் இன்று  பள்ளிக்குச் செல்லவில்லை.

கிருஷ்ணகிரியில் யானை தாக்கி இருசக்கரத்தில் சென்ற வாலிபர் பலி; வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு

மேலும், வீட்டின் முகப்புப் பக்கத்தில் வாய்க்கால் கரையில் சாலை அமைத்து தராமல் இருந்த அதிகாரிகளுக்கு நன்றி எனவும், சாலை இல்லாததால் பள்ளிக்குச் செல்லவில்லை எனவும் கூறி மாணவனின் புகைப்படத்தோடு வைக்கப்பட்டுள்ள பதாகையால் கீரமங்கலம் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios