2026 தேர்தலில் விஜய் பஞ்ச் டயலாக் பேசுவது அரசியலுக்கு உதவாது என்றும், பாஜகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை என்றும் கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் தெரிவித்தார். இரு மொழி கொள்கையே தமிழகத்திற்கு போதுமானது என்றும் அவர் கூறினார்.

புதுக்கோட்டையில் சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டிளிக்கையில்: 2026 தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் உள்ளது. அரசியல் கட்சி யார் ஆரம்பித்தாலும் அடுத்தது நாங்கள் தான் ஆட்சிக்கு என்று கூறுவது சகஜம்தான். சீமான் கூடதான் கூறுகிறார் நான் ஆட்சிக்கு வருவேன் என்று. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பன்ச் டயலாக்குகள் கூறுவதால் அவருடைய ரசிகர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வேண்டுமானால் குஷிப்படுத்தலாம். ஆனால் பஞ்ச் டயலாக்குகள் அரசியலுக்கு ஒத்து வராது.

பிரசாந்த் கிஷோர் பணம் கொடுத்தால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யூகங்களை அமைத்துக் கொடுப்பார் அவ்வளவுதான் அவரால்தான் வெற்றி பெறும் என்று கூற முடியாது. அப்படி என்றால் பீகாரில் அவருடைய கட்சி வெற்றி பெற்றிருக்க வேண்டும். பஞ்ச் டயலாக் பேசாமல் அவருடைய கொள்கைகள் தமிழக பிரச்சினையில் அவருடைய கருத்துக்கள் ஆகியவற்றை அவர் வெளிப்படையாக பொது வழியில் கூற வேண்டும். பஞ்ச் டயலாக்குகள் மீம்ஸ் போடுவதற்கு தான் சரியாக இருக்கும் 

அதேபோன்று பாஜக ஓடு கூட்டணி சேர்வதற்கு யாரும் தயாராக இல்லை. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாங்கிய வாக்குகளை விட 2026ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகளை தான் பாஜக பெரும். சீமான் விவகாரத்தில் அவரது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை வாழ்க்கை. எனவே அது குறித்து நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. காவல்துறை அவருடைய வீட்டில் செய்து கொண்ட நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றால் அவர்கள் நீதிமன்றத்தில் நாடி காவல்துறை மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பிரச்சனை குறித்து பொதுவெளியில் யாரும் பேசாமல் இருப்பது நல்லது.

பாலியல் வழக்குகள் அதிகம் வருவது குறித்து வழக்குகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. விழிப்புணர்வு தான் ஏற்படுத்த முடியும். தனிமனித ஒழுக்கம் குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கற்றுத்தர வேண்டும். அதேபோன்று பள்ளிகளிலும் இது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மாற்ற வேண்டும் என்று பலர் டெல்லிக்கு சென்றுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் டெல்லிக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் தலைவர்களை சந்திக்கலாம். ஆனால் மாற்றம் குறித்து எந்த நடவடிக்கையும் டெல்லியில் எடுக்கக்கூடிய சூழ்நிலை தற்போது இல்லை என்று தான் நான் கேள்விப்படுகிறேன்.

தமிழகத்தில் இரு மொழி கொள்கைகளே போதுமானது. குறிப்பாக அரசு பள்ளிகளில் இரு மொழி கொள்கைகள் மட்டும் போதும் மூணாவது மொழி கட்டாய பாடகமாக தமிழகத்திற்கு கொண்டு வருவது என்பது தேவையில்லை. தார்த்தமாக பார்க்க வேண்டும் என்றால் மூன்றாவது மொழியாக பின்னர் ஹிந்தி தான் திணிக்கப்படும். மொழியை கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்றால் இது போன்ற நடவடிக்கையாக தான் முடியும் அதைதான் பாஜக செய்கிறது. நமது மொழி கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் ஆகவே நமக்கு இரு மொழி கொள்கை போதும் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.