Asianet News TamilAsianet News Tamil

கணக்கு தேர்வில் குறைந்த மதிப்பெண்; தந்தை சென்ற இடத்திற்கே செல்வதாக கூறிவிட்டு மாணவி விபரீத முடிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ம் வகுப்பு காலாண்டுத் தேர்வில் கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அண்ணனுக்கு பயந்து மாணவி தற்கொலை.

10th standard student commits suicide for fail in quarterly exam in pudukkottai district vel
Author
First Published Sep 30, 2023, 10:13 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆதித்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன், சுதா தம்பதியர். இவர்களுக்கு இவர்களுக்கு ஒரு மகனும், அனு ஸ்ரீ(வயது 14) என்ற மகளும் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முருகேசன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அனு ஸ்ரீ அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அனு ஸ்ரீ திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை பெற்றோர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் காலாண்டு தேர்வில் கணக்கு பாடத்தில் மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளேன். இது தெரிந்தால் அம்மாவும், அண்ணனும் திட்டுவார்கள் இதனால் தந்தை சென்ற இடத்திற்கே நானும் சென்று விடுகிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுடன் தீக்குளித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்! அதிர்ச்சியில் உயிரை விட்ட தந்தை!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அண்மையில் வெளியான காலாண்டு தேர்வில் மாணவி கணிதப் பாடத்தில் 10 மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரிய வந்தது. தேர்வில் தோல்வியுற்றதால் பெற்றோருக்கு பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதை காவல் துறையினர் உறுதிப்படுத்திக் கொண்டனர். மேலும் தற்கொலை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios