Asianet News TamilAsianet News Tamil

இப்ப நாச்சி புரியுதா.. இன்னமும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு இதுதான் காரணம்.. பிரேமலதா விஜயகாந்த்.!

போதை இல்லாத தமிழகம் என்று முதல்வர் கூறிவரும் நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

This is the reason why Senthil Balaji continues as minister.. premalatha vijayakanth tvk
Author
First Published Oct 21, 2023, 9:54 AM IST

தமிழகத்தில் மதுவிற்கு அடிமையாகி பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் மட்டும் அல்லாமல் பெண்களும் மதுவிற்கு அடிமையாகி வருகிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்;- திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக செய்து வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை விஷயத்தில் தேர்தலுக்கு முன்பாக ஒரு நிலைப்பாட்டையும் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகு தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறியும் உள்ளது.  மகளிர் உரிமைத்தொகை விவகாரம் திமுகவிற்கு மக்களவை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றார். 

இதையும் படிங்க;- தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்னர் அரசியல் கட்சியினர் யோசிக்க வேண்டும்- பிரேமலதா அதிரடி

This is the reason why Senthil Balaji continues as minister.. premalatha vijayakanth tvk

தற்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது கிடையாது. தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளது என்பதை குறித்து நிலைபாடு விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இதுவரை தெளிவு இல்லை. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நான்கு முறை நிராகரிக்கப்பட்ட போதிலும் இன்னமும் அமைச்சராக தொடர்கிறார் என்றால் திமுகவிற்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினரும் செந்தில் பாலாஜி எந்த அளவுக்கு நெருக்கமாக உள்ளார். அவர்களும் ஊழல் செய்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது.

This is the reason why Senthil Balaji continues as minister.. premalatha vijayakanth tvk

போதை இல்லாத தமிழகம் என்று முதல்வர் கூறிவரும் நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. படிப்படியாகத்தான் டாஸ்மார்கள் மூட முடியும் என்பது உண்மைதான் இருந்தாலும் பூரண மதுவிலக்கு நோக்கி தமிழகம் செல்ல வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

This is the reason why Senthil Balaji continues as minister.. premalatha vijayakanth tvk

தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில் விற்பனை இலக்கு விரைவில் நிர்ணயம் செய்யப்பட்டு அது 100 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் இளைஞர்கள் பெண்கள் உட்பட அனைவருமே தற்போது மது மற்றும் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளது வேதனை அளிக்கக் கூடியது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios