ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளங்களை கொண்டு செல்ல சட்டம் அனுமதிக்கும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே இது நடப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியர் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமைப் பதியில் தைத்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. வாழைத்தார் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக அய்யா வழி பக்தர்கள் வழங்கி அய்யா வைகுண்டரை வழிபட்டனர்.
கன்னியாகுமரியில் தேவாலய வளாகத்தில் போக்குவரத்து ஊழியர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ரான்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கன்னியாகுமரியில் இருந்து கனிம வளங்களை எடுத்துச் செல்லும் கேரளா அரசு பதிலுக்கு மருத்துவம், இறைச்சி கழிவுகளை கொட்டி மாவட்டத்தையே குப்பை கிடங்காக மாற்றி வருவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் காப்பாற்ற முயற்சிப்பதாகக்கூறி உறவினர்கள், நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிவந்த கனரக லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உடல் சிதறி பலியான நிலையில் லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம்.
கன்னியாகுமரியில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேருந்து நிலையத்தில் தற்காலிக பணியாளரால் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து.
Kanyakumari News in Tamil - Get the latest news, events, and updates from Kanyakumari district on Asianet News Tamil. கன்னியாகுமரி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.