Asianet News TamilAsianet News Tamil

போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் காப்பாற்ற முயற்சிப்பதாகக்கூறி உறவினர்கள், நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக பாதிரியார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து இன்று கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தில் கொலை செய்யப்பட்ட சேகர் குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சேவியர் குமாரின் மனைவி செய்தியாளரிடம் கூறுகையில், எனது கணவரின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளில் ஒருவரான ரமேஷ் பாபு என்பவர் திமுக ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அவரை காப்பாற்றுவதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உதவி செய்கிறார். 

தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு எனக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அதுவரை எனது கணவரின் உடலை வாங்க மாட்டேன் என்று தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட மைலோடு தேவாலயத்தில் முன்பு கொலையாளிகளை கைது செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

Video Top Stories