Asianet News TamilAsianet News Tamil

சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமைப் பதியில் தைத்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. வாழைத்தார் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக அய்யா வழி பக்தர்கள் வழங்கி அய்யா வைகுண்டரை வழிபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பகுதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆனி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் வாகனங்களில் வீதி உலா வந்தார். 

எட்டாம் நாள் திருவிழாவில் கலிவேட்டையும், 11வது நாள் திருவிழாவான இன்று மதியம் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அய்யா வைகுண்டர் தலைமை பதியில் இருந்து பல்லக்கு வாகனம் மூலமாக சம்பூரண தேருக்கு எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த அய்யாவழி மக்கள் மற்றும் பொதுமக்கள் வாழைத்தார்கள் மற்றும் விலை பொருட்களை காணிக்கையாக செலுத்தி அய்யாவை வழிபட்டனர். இந்த தேரோட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Video Top Stories