Asianet News TamilAsianet News Tamil

கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேருந்து நிலையத்தில் தற்காலிக பணியாளரால் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து. 

அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களான அண்ணா தொழிற்சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம், காமராஜர் நாடார் சங்கம், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் தமிழக அரசு தொமுச சங்கம், ஏனைய சங்கங்களை முன்னிறுத்தி மேலும் தற்காலிக பணியாளர்களை வைத்து அரசு பேருந்து இயக்கி வருகின்றனர். 

பல்வேறு மாவட்டங்களில் 50% க்கும் கீழே பேருந்துகள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பேன்சி  கடையை தற்காலிகமாக அரசு பேருந்து இயக்கிய ஒட்டுநர் இடித்து விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் கடையில் உள்ள பொருட்கள் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அரசுப் பேருந்து நடத்துநர் கடை ஊழியர் பேசிய ஆடியோ வைரல் ஆகியுள்ளது. அதில் தற்காலிக ஊழியரை வைத்து அரசு பேருந்து ஓட்டுவதால் இந்த விபத்து ஏற்பட்டதுள்ளது என  அலட்சியமாக பதில் அளித்தார். மேலும் பார்த்துக் கொள்ளலாம் வேற என்ன செய்ய முடியும் என்ற தொணியில் பேசி பேருந்தை இயக்கி சென்றுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி உள்ளது. தற்காலிக பணியாளர்கள் அரசு பேருந்தை சாலையில் இயக்கும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும், மேலும் பழுதடைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் பெரு விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

Video Top Stories