முகமது அனீப் சேக், விஜயகுமாரை அழைத்துக்கொண்டு பல்வேறு நண்பர்களை சந்தித்தும், மதரஸாக்களுக்கு சென்றும் நிதி திரட்டியுள்ளார். அதில் சுமார் 3 லட்சம் சேர்ந்துள்ளது. அதை பாறைப்பட்டியில் கோவில் கட்டுவதற்கு முகமது அனீப் சேக் அளித்தார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு பவித்ராவின் உடலுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்குகள் நடத்தினர். மனைவி இறந்த துக்கத்தில் மனஉளைச்சலில் இருந்த வீரணன், சுடுகாட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பின் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு உள்ள டோல்கேட்டில் இருந்து வேகமாக கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த எதிர் திசையில் சென்றது. அப்போது, எதிர்சையில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார்கள் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
23 வருடங்களுக்கு பிறகு தென்தமிழகத்தில் சூரிய கிரகணம் நிகழ இருப்பதால் அதை காண்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்மழை காரணமாக நேற்று முன்தினம் முதல் திடீரென வரத்து குறைந்ததால், முருங்கைக்காய் விலை 30 மடங்கு அதிகரித்தது. நேற்றும், நேற்று முன்தினமும் ஒரு கிலோ ரூ.30க்கு விற்ற முருங்கைக்காய்,, ரூ600 க்கு விற்றது.
திடீரென மிரண்டு போன காளை மாடு துள்ளி குதித்திருக்கிறது. அதை ஆசுவாசப்படுத்த நினைத்த மணிவேலிடம் முரண்டு பிடித்த காளைமாடு அவரை முட்டித்தள்ளியது.
திண்டுக்கல் அருகே தந்தையை முட்டிய காளைமாட்டை அடங்கிய மகனை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.
திண்டுக்கல் அருகே ஆற்றில் தத்தளித்தவர்களை காப்பாற்ற சென்ற அண்ணன் தம்பி இருவரும் நீர்சுழலில் சிக்கி பலியாகினர்.
திண்டுக்கல்லில் பழைய 10 பைசா நாணயத்திற்கு 150 ரூபாய் டீ ஷர்ட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் திரண்டது.
5 பைசா பழைய நாணயத்தைக் கொண்டு வருபவர்களுக்கு 1/2 பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
Dindigul News in Tamil - Get the latest news, events, and updates from Dindigul district on Asianet News Tamil. திண்டுக்கல் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.