அதிர்ச்சியில் மக்கள்... வெங்காயத்தை அடுத்து முருங்கையின் விலையும் உயர்வு..!! ஒரு கிலோ 300 க்கு விற்பணை..!!
தொடர்மழை காரணமாக நேற்று முன்தினம் முதல் திடீரென வரத்து குறைந்ததால், முருங்கைக்காய் விலை 30 மடங்கு அதிகரித்தது. நேற்றும், நேற்று முன்தினமும் ஒரு கிலோ ரூ.30க்கு விற்ற முருங்கைக்காய்,, ரூ600 க்கு விற்றது.
திண்டுக்கல்லில் தொடர்மழை காரணமாக வரத்துக்குறைவால் முருங்கைக்காய் கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், வத்தலக்குண்டு, குஜிலியம்பாறை, தொப்பம்பட்டி பகுதிகளில் 262 எக்டேரில் முருங்கைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கிருந்து மதுரை, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தினமும் 500 கிலோ வரை முருங்கைக்காய் விற்பனைக்கு வரும். சென்ற 2 மாதங்களாக வரத்து அதிகரித்து இருந்த முருங்கைக்காய் விலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக நேற்று முன்தினம் முதல் திடீரென வரத்து குறைந்ததால், முருங்கைக்காய் விலை 30 மடங்கு அதிகரித்தது. நேற்றும், நேற்று முன்தினமும் ஒரு கிலோ ரூ.30க்கு விற்ற முருங்கைக்காய்,, ரூ600 க்கு விற்றது.
இதனால், மக்கள் முருங்கைக்காய் வாங்குவதை தவிர்த்து, விலை மலிவான மற்ற காய்கறிகளை வாங்கினர்.. , ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருவதாலும் முகூர்த்தங்கள் அதிகமுள்ள தாலும் முருங்கைக்காய் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளது.