23 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் நிகழப் போகும் அதிசய கிரகணம்..!
23 வருடங்களுக்கு பிறகு தென்தமிழகத்தில் சூரிய கிரகணம் நிகழ இருப்பதால் அதை காண்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வருகிற 26 ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்விருக்கிறது. அன்றைய தினம் காலை 8.3 மணி முதல் 9.33 வரை சூரியன் மறையும் நிகழ்வானது நடைபெற இருக்கிறது. அப்போது பகல் நேரம் இரவு போல காட்சியளிக்கும். பின் 11 மணிக்கு மேல் கிரகணம் நிறைவடையும். இந்த காட்சி கேரளா தொடங்கி கோவை, பொள்ளாச்சி,திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை வழியாக நிறைவு பெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சூரிய கிரகணம் முழுமையாக தெரிய வாய்ப்பிருப்பதாக இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. சூரியகிரகணத்தை அனைவரும் கண்டுகளிப்பதற்காக கொடைக்கானலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்பதற்காக பிரத்யேக கண்ணாடிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்காக 10 ஆயிரம் கண்ணாடிகள் வரவழைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதன் விலை 10 ரூபாய். கொடைக்கானலில் இருக்கும் இந்திய வான் ஆராய்ச்சி மையத்தில் அவை இன்று முதல் விற்பனை செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறினர். இதற்கு முன்பாக கடந்த 1996 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் சூரிய கிரகணம் தெரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.