இந்துக்கோவில் கட்ட 3 லட்சம் வசூலித்து கொடுத்த இஸ்லாமியர்..! நெகிழ்ச்சியில் தமிழக கிராமம்..!
முகமது அனீப் சேக், விஜயகுமாரை அழைத்துக்கொண்டு பல்வேறு நண்பர்களை சந்தித்தும், மதரஸாக்களுக்கு சென்றும் நிதி திரட்டியுள்ளார். அதில் சுமார் 3 லட்சம் சேர்ந்துள்ளது. அதை பாறைப்பட்டியில் கோவில் கட்டுவதற்கு முகமது அனீப் சேக் அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கிறது பாறைப்பட்டி கிராமம். இந்த ஊரில் ஏராளமான இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஊரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இரு மதத்தினர் ஒன்றாக கலந்து கொண்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஊரைச் சேர்ந்தவர் முகமது அனீப் சேக். தற்போது குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார். இவரது நண்பர் விஜயகுமார். பாறைப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கிராமத்தில் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக ஊர்மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து வருகின்றனர். விஜயகுமார் தனது நண்பரான முகமது அனீப் சேக்கை சந்தித்து கோவில் கட்டுவதற்கு நிதி திரட்டப்படுவது குறித்து கூறியுள்ளார்.
ஐ.டி நிறுவனங்களுக்கு சிறப்பு விடுமுறை..? கொரோனா பதற்றத்தில் இந்தியா..!
இதையடுத்து முகமது அனீப் சேக், விஜயகுமாரை அழைத்துக்கொண்டு பல்வேறு நண்பர்களை சந்தித்தும், மதரஸாக்களுக்கு சென்றும் நிதி திரட்டியுள்ளார். அதில் சுமார் 3 லட்சம் சேர்ந்துள்ளது. அதை பாறைப்பட்டியில் கோவில் கட்டுவதற்கு முகமது அனீப் சேக் அளித்தார். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, பாறைப்பட்டி மக்கள் மத வேறுபாடுகளை கடந்து உறவினர்களாக சகோதரத்துவத்துடன் பழகி வருவதாக தெரிவித்தனர். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றனர் பாறைப்பட்டி கிராம மக்கள்.