வெளியானது "அம்மன் தாயி" டீசர்! ஜூலி வெறியர்களுக்கு செம்ம ட்ரீட்?!

ஜூலி  இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தின் டீசரில், ஜூலி தனது ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். ஆமாம் வெறும் ஒரு காட்சியில் மட்டுமே காட்சியளிக்கிறார். டீசரில் தனது தலைவி ஏமாற்றினாலும், தனது வெறித்தனமான ரசிகர்களுக்கு, படத்தில் ஃபுள் மீல்ஸ் கொடுக்க இருக்கிறாராம் ஜூலி, ஆமாம் அப்படி ஒரு நடிப்பாம். 
 

Share this Video

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் கவனம் பெற்று அதிக பாராட்டுக்களைப் பெற்றவர் ஜூலி. அவரை தூக்கிவைத்து கொண்டாடியவர்களெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு அவரின் நடவடிக்கை பிடிக்காமல் ரசிகர்கள் வெறித்தனமாக கழுவித் தள்ளினர். ஆனால், அதுவே சுளிக்கு வளர்ச்சியை ஏற்படுத்தியது. ஜுலியும் பிரபலமானார். இதனையடுத்து வெளியில் வந்த ஜூலிக்கு தொலைகாட்சியில் தொகுப்பாளினி வேலை நிரந்தரமானது. இதனையடுத்து சினிமாவிற்குள் நுழைந்த ஜூலி அம்மன் தாயி என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஜூலி இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தின் டீசரில், ஜூலி தனது ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். ஆமாம் வெறும் ஒரு காட்சியில் மட்டுமே காட்சியளிக்கிறார். டீசரில் தங்களது தலைவி ஏமாற்றினாலும், தனது வெறித்தனமான ரசிகர்களுக்கு, படத்தில் ஃபுல் மீல்ஸ் கொடுக்க இருக்கிறாராம் ஜூலி, ஆமாம் ஆமாம் அப்படி ஒரு நடிப்பாம். ஆனால் படம் வெளியானால் ஜூலியை வெச்சு செய்ய ஓவியா ஆர்மியும் நெட்டிசன்களும் வழிமேல் விழி வைத்து காத்துக் கிடக்கின்றனர்.

Related Video