இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:56 PM (IST) Dec 11
IND vs SA 2nd T20: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் படுமோசமான பேட்டிங் தொடர்கிறது.
10:35 PM (IST) Dec 11
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் 2 படம் உருவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
10:20 PM (IST) Dec 11
Regina Cassandra Waiting for Star Status for 20 Years : சுமார் 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தும், ஸ்டார் ஹீரோயினாக உயர பல முயற்சிகள் செய்தும், பெரிய ஹீரோக்களுடன் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது டோலிவுட்டில் இருந்து காணாமல் போன நடிகை யார் தெரியுமா?
10:17 PM (IST) Dec 11
தாய்லாந்து விஞ்ஞானிகள் 5.44 லட்சம் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, 'B(A)' என்ற மிக அரிய புதிய இரத்த வகையை மூன்று பேரிடம் கண்டறிந்துள்ளனர். இது உலகளாவிய இரத்தப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.
10:06 PM (IST) Dec 11
2026 டி20 உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. வெறும் 100 ரூபாயில் டிக்கெட் புக் செய்யலாம். எப்படி டிக்கெட் புக் செய்து? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
10:03 PM (IST) Dec 11
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் பதற்றங்கள் நீடிக்கும் சூழலில், பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் தொலைபேசியில் உரையாடினர். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
10:02 PM (IST) Dec 11
Nayanthara Surprise Nagarjuna Flop Movie Incident : சிரஞ்சீவி படத்திற்காக நயன்தாராவை சம்மதிக்க வைக்க, நாகார்ஜுனா படம் பற்றி கூறி இயக்குநர் அனில் ரவிபுடி த்ரில் செய்துள்ளார். நாகார்ஜுனா படத்தைப் பற்றி ஏன் பேசினார்?
09:24 PM (IST) Dec 11
46 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த டிடி காக், ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்சர்களுடன் விளாசினார்.
09:19 PM (IST) Dec 11
Navarasa Nayagan Karthik Health Rumours : நவசர நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
08:49 PM (IST) Dec 11
08:32 PM (IST) Dec 11
Karthigai Deepam Serial Fans Troll and Review Rating : ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
08:05 PM (IST) Dec 11
வட இந்தியாவில் வ.உ.சி.யின் பெயர்களை ஏன் வைக்கவில்லை? என திருச்சி சிவா கேள்வி எழுப்பிய நிலையில், வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? என வ.உ.சி பேத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
07:56 PM (IST) Dec 11
Bigg Boss Julie Engaged to Mohammed Ikreem : பிக் பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் வருங்கால கணவர் யார் என்று வெளிப்படுத்தாத நிலையில் தற்போது அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
07:27 PM (IST) Dec 11
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என திமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களவையில் இதுகுறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.
07:07 PM (IST) Dec 11
தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒருவழியாக டாஸ் வென்றார். இந்திய அணி பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.
06:44 PM (IST) Dec 11
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் நசிருதீன் முழு தேர்தல் அட்டவணையையும் வெளியிட்டுள்ளார்.
06:43 PM (IST) Dec 11
Karthigai Deepam Serial Karthik Shocking Arrest : கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் அதிரடியாக கைது செய்யப்பட்டு போலீஸ் லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார்.
06:41 PM (IST) Dec 11
குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
06:32 PM (IST) Dec 11
புதிய தொழிலாளர் சட்டத்தால் ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறையும் என அச்சம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து மத்திய தொழிலாளர் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
06:16 PM (IST) Dec 11
நாம் தினமும் செய்யும் சில பழக்கங்கள் பற்களில் கறையை ஏற்படுத்துகின்றன. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
06:08 PM (IST) Dec 11
தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான கால அவகாசம் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் 14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
05:59 PM (IST) Dec 11
வாஷிங் மெஷினில் லிக்விட் அல்லது பவுடர் பயன்படுத்துவதில் குழப்பமா? உங்கள் மெஷினின் வகைக்கேற்ப எது சிறந்தது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
05:43 PM (IST) Dec 11
Indian Railways Senior Citizen Facilities: இந்தியன் ரயில்வே ரயில் பயணத்தின்போது மூத்த குடிமக்களுக்கு வழங்கி வரும் 5 சலுகைகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
05:24 PM (IST) Dec 11
Saravanan Attack Father in Law Fight Episode Highlights : விஜய் டி.வி-யின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் தற்போது குடும்பப் பாசத்திலிருந்து விடைபெற்று, அதிரடி சண்டைக்களமாக மாறியுள்ளது.
05:23 PM (IST) Dec 11
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து போனவர்களை ஒன்று சேர்ப்பதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆர்வம் காட்டாத நிலையில் முன்னாள் தலைவர் அண்ணாமலையை பாஜக மேலிடம் களம் இறக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
05:10 PM (IST) Dec 11
எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், தனது திருமணத்தின் போது, சிஎஸ்கே போட்டிகளை தடையின்றி பார்க்க அனுமதிக்குமாறு தனது மனைவிக்கு ஒரு வேடிக்கையான ஒப்பந்தத்தை வழங்கினார்.
05:01 PM (IST) Dec 11
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் இடைத்தேர்தலும் நடந்தது. அதில் மோசமான தோல்வியை அதிமுக சந்தித்திருந்தால் அப்படியே ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால் பல சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
04:57 PM (IST) Dec 11
லக்னோவில், தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறி, பொறியாளரான தனது கள்ளக்காதலனை, காதலி ரத்னா தனது இரு மகள்களுடன் சேர்ந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தாய் மற்றும் மகள்களை போலீசார் கைது செய்தனர்.
04:54 PM (IST) Dec 11
பாத்திரம் கழுவும் போது சில தவறுகளை செய்யக்கூடாது. அவை என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
04:47 PM (IST) Dec 11
Dec 12 Thulam Rasi Palan : டிசம்பர் 12, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:43 PM (IST) Dec 11
Dec 12 Viruchiga Rasi Palan : டிசம்பர் 12, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:41 PM (IST) Dec 11
Dec 12 Dhanusu Rasi Palan : டிசம்பர் 12, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:40 PM (IST) Dec 11
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று திடீரென சந்தித்து பேசியது ஏன்? என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
04:38 PM (IST) Dec 11
Dec 12 Magara Rasi Palan : டிசம்பர் 12, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:36 PM (IST) Dec 11
Dec 12 Kumba Rasi Palan: டிசம்பர் 12, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:33 PM (IST) Dec 11
Dec 12 Meena Rasi Palan: டிசம்பர் 12, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:29 PM (IST) Dec 11
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க கோர்ட் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், அதில் ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிபதியாக இருந்த கானா வினோத், விஜய் சேதுபதியை கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
04:26 PM (IST) Dec 11
Pandian Stores 2 Serial Today 660th Episode Highlights: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 660ஆவது எபிசோடில் என்ன நடந்தது, ஹைலைட்ஸ் என்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
04:23 PM (IST) Dec 11
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுக்கும் முழு அதிகாரம் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டது. தேர்தல் அறிக்கை மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கென தனி குழுக்கள் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
04:18 PM (IST) Dec 11
வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து அதிகபட்சமாக ரூ.35,000 மட்டுமே எடுக்க முடியும். வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை என்றும், நிதி நிலைமை சீரடையும் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.