- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 2nd T20: ஒரு வழியாக டாஸ் வென்ற SKY.. இந்திய அணி பிளேயிங் லெவன் இதோ!
IND vs SA 2nd T20: ஒரு வழியாக டாஸ் வென்ற SKY.. இந்திய அணி பிளேயிங் லெவன் இதோ!
தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒருவழியாக டாஸ் வென்றார். இந்திய அணி பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி
நியூ சண்டிகரில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியில் ஒருவழியாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்திய அணியில் மாற்றமில்லை
முதல் டி20 போட்டியில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் இந்தியா இரண்டாவது போட்டியில் களமிறங்கும். சஞ்சு சாம்சனால் பிளேயிங் லெவனில் இடம் பெற முடியவில்லை. அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். குல்தீப் யாதவ், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடமில்லை. துணை கேப்டன் சுப்மன் கில் தொடக்க வீரராகத் தொடர்வார்.
தென்னாப்பிரிக்கா அணியில் மூன்று மாற்றங்கள்
அதே வேளையில் முதல் போட்டியில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. கேசவ் மகாராஜ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஆன்ரிச் நோர்க்யா ஆகியோர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெற்றனர்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங்.
தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்
தென்னாப்பிரிக்கா அணி பிளேயிங் லெவன்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, மார்கோ ஜான்சென், லுத்தோ சிபம்லா, லுங்கி என்கிடி, ஒட்னீல் பார்ட்மேன்.

