MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்தியா vs இங்கிலாந்து.. டி20 உலகக்கோப்பையில் கெத்து காட்டியது யார்? முழு ரிப்போர்ட்!

இந்தியா vs இங்கிலாந்து.. டி20 உலகக்கோப்பையில் கெத்து காட்டியது யார்? முழு ரிப்போர்ட்!

டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன. டி20 உலகக்கோப்பைகளில் இந்த இரு அணிகளின் செயல்பாடு என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
| Updated : Mar 02 2026, 10:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா vs இங்கிலாந்து
Image Credit : X/ICC

இந்தியா vs இங்கிலாந்து

டி20 உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் மார்ச் 4ம் தேதி நியூசிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. டி20 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் மார்ச் 5 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்திய அணி சூப்பர்-8 சுற்றை தோல்வியுடன் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. ஆனால், ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி மீண்டு வந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

24
யாருக்கு அதிக வெற்றி?
Image Credit : BCCI\Twitter

யாருக்கு அதிக வெற்றி?

அதே வேளையில் இங்கிலாந்து அணி சூப்பர்-8ல் அனைத்து போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு வந்துள்ளது. டி20 உலககோப்பையில் இந்த இரு அணிகளின் சாதனைகள் எப்படி உள்ளன? இந்த போட்டியின் முடிவை மாற்றக்கூடிய வீரர்கள் யார்? என்பது குறித்து பார்ப்போம். டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து மோதுவது இது 3வது முறை. 2022ல் இங்கிலாந்தும், 2024ல் இந்தியாவும் வென்றன. இதுவரை ஒட்டுமொத்த உலகக்கோப்பைகளில் 5 முறை மோதியதில், இங்கிலாந்து 3, இந்தியா 2 முறை வென்றுள்ளன.

Related Articles

Related image1
மோகன்லாலுக்கே டப் கொடுக்கும் சஞ்சு சாம்சன்.. 100 கோடி கிளப்.. சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
Related image2
இந்தியாவுடன் தோற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு PCB மரண அடி.. சம்பளம் கட் + ரூ.50 லட்சம் அபராதம்!
34
இங்கிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா கலக்கல்
Image Credit : Getty

இங்கிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா கலக்கல்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிகளில் ஹர்திக் பாண்ட்யா 86 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் (84), சூர்யகுமார் (61), கோலி (59) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இங்கிலாந்து கேப்டன் பட்லர் 103 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளுடன் முன்னிலையில் உள்ளனர். இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வான்கடே பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

44
அபிஷேக் சர்மாவின் பார்ம் கவலை
Image Credit : ANI

அபிஷேக் சர்மாவின் பார்ம் கவலை

இதற்கிடையே நடப்பு டி20 உலகக்கோப்பையில் படுமோசமாக விளையாடி வரும் அபிஷேக் சர்மா தனது பேட்டிங் நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''நடப்பு டி20 உலகக்கோப்பையில் மீண்டும் அபிஷேக் ஷர்மாவின் ஃபார்ம் ஒரு கவலையாக உள்ளது. அந்த அரைசதத்திற்குப் பிறகு, அவர் தொடர்ந்து ரன்கள் குவிப்பார் என்று தோன்றியது. 

ஆனால், அவர் அந்த ஷாட்டை ஆடியபோது, அவரது பின்னங்கால் முட்டி அதிகமாக வளைந்து, உடல் எடை பின்னோக்கிச் சென்றது. உண்மையில், அதிக எடை முன்னங்காலில் இருந்திருக்க வேண்டும், அதுதான் அவருக்குப் பொருத்தமானது. இதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
மைதானத்தில் நெகிழ்ச்சி! சஞ்சு சாம்சனை தலைவணங்கி பாராட்டிய சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் வீடியோ!
Recommended image2
இந்தியாவுடன் தோற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு PCB மரண அடி.. சம்பளம் கட் + ரூ.50 லட்சம் அபராதம்!
Recommended image3
மோகன்லாலுக்கே டப் கொடுக்கும் சஞ்சு சாம்சன்.. 100 கோடி கிளப்.. சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
Related Stories
Recommended image1
மோகன்லாலுக்கே டப் கொடுக்கும் சஞ்சு சாம்சன்.. 100 கோடி கிளப்.. சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
Recommended image2
இந்தியாவுடன் தோற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு PCB மரண அடி.. சம்பளம் கட் + ரூ.50 லட்சம் அபராதம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved