- Home
- Sports
- Sports Cricket
- மோகன்லாலுக்கே டப் கொடுக்கும் சஞ்சு சாம்சன்.. 100 கோடி கிளப்.. சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
மோகன்லாலுக்கே டப் கொடுக்கும் சஞ்சு சாம்சன்.. 100 கோடி கிளப்.. சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
Sanju Samson Net Worth: டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை தனியொருவனாக அரையிறுதிக்கு அழைத்து சென்ற சிஎஸ்கேவின் ஸ்டார் சஞ்சு சாம்சனின் சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

சஞ்சு சாம்சன் மேட்ச் வின்னர்
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 196 ரன்கள் இலக்கை இந்திய அணி 19.2 ஓவரில் எட்டியது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 97 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து மேட்ச் வின்னராக ஜொலித்தார்.
சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு
சமீபக காலமாக டி20 போட்டிகளில் மோசமாக விளையாடியதால் டி20 உலகக்கோப்பையின் ஒரு சில ஆட்டங்களில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் நேற்றைய போட்டியில் அசத்திய அவர் தான் யாரென்று நிரூபித்துள்ளார். பேட்டிங்கில் சிக்சர் மன்னனாக விளங்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்புலும் சிக்சர் மன்னனாக விளங்குகிறார். சஞ்சு சாம்சனின் சொத்து மதிப்பு குறித்து பார்ப்போம்.
ஐபிஎல், பிசிசிஐ வருமானம்
சஞ்சு சாம்சனின் வருமானத்தில் ஐபிஎல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐபிஎல்லில் ஆண்டுக்கு சுமார் ₹18 கோடி சம்பாதிக்கிறார். இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக ₹18 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளளார். ஐபிஎல் மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) மத்திய ஒப்பந்தம் மூலமும் சாம்சன் சம்பாதிக்கிறார். தற்போது கிரேடு C ஒப்பந்தத்தில் உள்ள இவர், ஆண்டுக்கு சுமார் ₹1 கோடி ஊதியம் பெறுகிறார்.
100 கோடி கிளப்பில் இணையும் சஞ்சு
இப்போது பல்வேறு கிரிக்கெட் வீரர்களைப் போலவே, சஞ்சு சாம்சனும் விளம்பரங்கள் மூலம் கணிசமாக சம்பாதிக்கிறார். விளையாட்டு, லைஃப்ஸ்டைல் தொடர்பான பல முன்னணி பிராண்டுகளுடன் அவர் இணைந்து பணியாற்றி வருகிறார். அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, சஞ்சு சாம்சனின் நிகர சொத்து மதிப்பு ₹75 முதல் ₹86 கோடி வரை இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் அவர் 100 கோடி கிளப்பில் இணைந்து விடுவார்.
சொகுசு கார்கள், சொகுசு வீடு
கிரிக்கெட் வருமானம் தவிர, ரியல் எஸ்டேட் முதலீடுகள், ஆடம்பர சொத்துகளும் இதில் அடங்கும். சஞ்சு சாம்சனிடம் ஆடி, பிஎம்டபிள்யூ, ரேஞ்ச் ரோவர் போன்ற சொகுசு கார்கள் மற்றும் சொகுசு வீடுகள் உள்ளன. மேலும், எதிர்கால வீரர்களுக்காக ஒரு பயிற்சி அகாடமியையும் சஞ்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
