MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • தோனி, கோலி, ரோகித் கொடுத்த டிப்ஸ்.. பார்முக்கு திரும்பியது எப்படி? ரகசியத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!

தோனி, கோலி, ரோகித் கொடுத்த டிப்ஸ்.. பார்முக்கு திரும்பியது எப்படி? ரகசியத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!

டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 97 ரன்கள் விளாசி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்ற சஞ்சு சாம்சன் மீண்டும் பார்முக்கு திரும்ப உறுதுணையாக இருந்தது குறித்து பேசியுள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Mar 02 2026, 12:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்திய அணி அபார வெற்றி
Image Credit : Getty

இந்திய அணி அபார வெற்றி

டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் சென்றுள்ளது. இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணம் இளம் வீரர் சேட்டன் சஞ்சு சாம்சனின் மாஸ் இன்னிங்ஸ் தான். தன்னுடைய டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் சேஸிங்கில் பதட்டப்படாமல் ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் வெறும் 50 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 97 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சஞ்சு சாம்சன் மேஜிக் இன்னிங்ஸ்
Image Credit : Getty

சஞ்சு சாம்சன் மேஜிக் இன்னிங்ஸ்

பார்ம் இன்றி தவித்த சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்குவது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் மிக முக்கியமான இந்த போட்டியில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து தான் யார் என்பதை சஞ்சு சாம்சன் நிரூபித்துள்ளார். மிக முக்கியமான கட்டத்தில் இந்திய அணிக்கு கைகொடுத்த அவருக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில், தான் மீண்டும் பார்முக்கு திரும்ப தோனி, ரோகித், கோலி ஆகியோரின் ஆட்டம் உறுதுணையாக இருந்தது என்று சஞ்சு சாம்சன் தெவித்துள்ளார்.

35
இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன்
Image Credit : X@BCCI

இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன்

இது தொடர்பாக ஆட்டம் முடிந்த பிறகு ஆட்டநாயகன் விருது வாங்கும்போது பேசிய சஞ்சு சாம்சன், ''இது எனக்கு முழு உலகத்தையும் குறிக்கிறது. நான் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்து, நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று கனவு காணத் தொடங்கியதிலிருந்து இதுதான் நான் காத்திருந்த ஒரு ஆட்டம். இந்த இன்னிங்ஸ்காதத்தான் காத்திருந்தேன். மிகவும் சிறப்பு வாய்ந்த பயணத்தில் நிறைய ஏற்ற தாழ்வுகளைக் கண்டேன். நாம் வெற்றி பெறுவோமா என்று என்னை நானே சந்தேகித்துக்கொண்டே இருந்தேன். ஆனால் இன்று என்னை ஆசிர்வதித்த இறைவனுக்கு நன்றி'' என்றார்.

45
கோலி, தோனி, ரோகித்திடம் கற்றுக் கொண்டேன்
Image Credit : our own

கோலி, தோனி, ரோகித்திடம் கற்றுக் கொண்டேன்

தொடர்ந்து தான் பார்முக்கு திரும்பியதற்கு உறுதுணையான விஷயங்கள் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், ''நான் பல ஆண்டுகளாக இந்த வடிவத்தில் விளையாடி வருகிறேன். கோலி, ரோகித் சர்மா, தோனி போன்ற பல சிறந்த வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும், சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் ஆட்டத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் கவனித்திருக்கிறேன். இது என் அனுபவத்துக்கு மிகவும் உதவியது.

55
பந்தின் தன்மைக்கு ஏற்ப பேட்டிங்
Image Credit : ANI

பந்தின் தன்மைக்கு ஏற்ப பேட்டிங்

கடந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ததால் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடினேன். ஆனால் இந்தப் போட்டி வித்தியாசமானது. ஒவ்வொரு முறையும் நான் அதிரடியாக ஆட முயலும்போது விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. ஆனால் பந்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடினேன். இவ்வளவு சிறப்பான ஒரு ஆட்டத்தை நான் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. என் வாழ்வின் மிகச் சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று'' என்று தெரிவித்துள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
சஞ்சு சாம்சன்
எம். எஸ். தோனி
விராட் கோலி
ரோகித் சர்மா
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
Recommended image2
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image3
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Related Stories
Recommended image1
சிக்ஸர் மழை.. யுனிவர்ஸ் பாஸ் கெயிலை முந்திய WI வீரர்.. டி20 கிரிக்கெட்டில் பவல் புதிய சாதனை!
Recommended image2
சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம்.. கதறிய வெஸ்ட் இண்டீஸ்.. கெத்தாக செமி பைனல் சென்ற இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved