- Home
- Sports
- Sports Cricket
- IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
IPL 2027: ஐபிஎல் 2027 சீசனுக்காக சிஎஸ்கே அணி கலீல் அகமது, நாதன் எல்லிஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கொடுத்து விட்டு லியாம் லிவிங்ஸ்டன், ஜாக் எட்வர்ட்ஸ்ஸை வாங்கியுள்ளது. இதற்கு ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

SRH-CSK வீரர்கள் பரிமாற்றம்
ஐபிஎல் 2027 தொடரில் களமிறங்குவதற்காக அனைத்து அணிகளும் இப்போதே ஆயத்தமாகி வருகின்றனர். தங்களுக்கு பிடித்தமான அணிகளை மற்ற அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிரேட் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் 4 வீரர்களை தங்களுக்குள் மாற்றிக்கொண்டுள்ளன.
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோர் சென்னை அணிக்கு வருகின்றனர். அதேசமயம், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு செல்கின்றனர்.
நாதன் எல்லிஸ், கலீல் அகமது ஹைதராபாத்தில்
ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பு லிவிங்ஸ்டனை ரூ.13 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. இப்போது அவர் ரூ.6 கோடி என்ற குறைக்கப்பட்ட விலையில் சிஎஸ்கேவில் இணைகிறார். ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்ட எட்வர்ட்ஸ் அதே விலையில் சென்னைக்கு வருகிறார். பதிலுக்கு, கலீல் அகமது (ரூ.4.8 கோடி) மற்றும் நாதன் எல்லிஸ் (ரூ.2 கோடி) ஆகியோரை அதே விலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்றுள்ளது.
இந்த மாற்றம் மூலம் இரண்டு அணிகளுமே தங்களது பலத்தை அதிகரித்துள்ளன. சிஸ்கே அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் கிடைத்துள்ளனர். ஹைதராபாத் அணி தனது வேகப்பந்து வீச்சை பலப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகும் முன்பே ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட எட்வர்ட்ஸ், கால் காயம் காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
சிறப்பான வீரர்களை விட்டுக்கொடுக்கும் சிஎஸ்கே
மறுபுறம், கலீல் அகமது மீண்டும் ஹைதராபாத் அணிக்கே திரும்புகிறார். இவர் 2018 முதல் 2021 வரை அதே அணியில் விளையாடியவர். 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் 2026 சீசனில் தொடை தசைநார் காயம் காரணமாக 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் நாதன் எல்லிஸ், SRH அணியின் வேகப்பந்து வீச்சுக்கு கூடுதல் பலம் சேர்ப்பார். சிஸ்கே அணிக்கு வந்துள்ள இங்கிலாந்தை சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டன் வலது கை ஸ்பின் பவுலிங்குடன் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடியவர். மிக பிரம்மாண்ட சிக்சர்களை பறக்க விடுவதில் வல்லவர். இதேபோல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக் எட்வர்ட்ஸ் மீடியம் பாஸ்ட் பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடி காட்டுபவர்.
லிவிங்ஸ்டன் தேவையில்லாத லக்கேஜ்
இவர்கள் இருவரும் திறமைவாய்ந்த வீரர்கள் என்றாலும் கடந்த சில சீசன்களின் சிஎஸ்கே அணிக்காக சூப்பராக பவுலிங் செய்த கலீல் அகமது மற்றும் பாஸ்ட், ஸ்லோ என பவுலிங்கில் நிறைய வேரியேஷன் காட்டி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் நாதன் எல்லீஸை சிஎஸ்கே விடுவித்தது சரியான அணுகுமுறை அல்ல என ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜாக் எட்வர்ட்ஸ் இன்னும் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடவில்லை.
மறுபக்கம் ஆர்சிபி, பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதாராத அணிகளுக்காக விளையாடியுள்ள லியாம் லிவிங்ஸ்டன் 51 போட்டிகளில் விளையாடி 7 அரைசதத்துடன் 1066 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிக்கப்பட்சம் 96. பவுலிங்கில் 13 விக்கெட் எடுத்துள்ளார்.
லிவிங்ஸ்டனை பொறுத்தவரை எதாவது ஒரு மேட்ச் கிளிக் ஆனால் மட்டுமே அவரால் ஜொலிக்க முடியும். தொடர்ந்து கன்சஸ்டியாக விளையாடுபவர் அல்ல. அதுவும் ஸ்பின் பவுலிங்கில் அதிகமாக தடுமாறக்கூடியவர். ஏற்கெனவே சென்னை சேப்பாக்கம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், அவரை எடுத்தது சிஎஸ்கேவின் பெரும் தவறு என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.





