- Home
- Business
- அடேங்கப்பா! ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு சலுகையா.. முழு விவரம்! நோட் பண்ணிக்கோங்க!
அடேங்கப்பா! ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு சலுகையா.. முழு விவரம்! நோட் பண்ணிக்கோங்க!
Indian Railways Senior Citizen Facilities: இந்தியன் ரயில்வே ரயில் பயணத்தின்போது மூத்த குடிமக்களுக்கு வழங்கி வரும் 5 சலுகைகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகை
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளின் அடிப்படையில் இந்திய ரயில்வே நான்காவது இடத்தில் உள்ளது. பயணிகளுக்கு வசதிகளை வழங்குவதில் இந்திய ரயில்வே முன்னணி வகிக்கிறது. அதுவும் மூத்த குடிமக்களுக்கு ரயில்வே பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது. ரயில்வே மூத்த குடிமக்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
லோயர் பெர்த் இனி ஈஸி
ரயிலில் ஸ்லீப்பர், ஏசி 3 டயர் மற்றும் ஏசி 2 டயர் பெட்டிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் லோயர் பெர்த்கள் வழங்கப்படுகின்றன. இதனால் அவர்கள் ஏறுவதிலும் இறங்குவதிலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. டிக்கெட் புக் செய்யும்போதே அவர்களுக்கு லோயர் பெர்த் வழங்கப்பட்டு விடும். ஒரு வேளை ரயில் புறப்பட்ட பிறகும் ஏதேனும் கீழ் பெர்த் காலியாக இருந்தால், அது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும்.
சக்கர நாற்காலி வசதியும் உண்டு
இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கியமான ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு இலவச சக்கர நாற்காலிகள் வசதி உள்ளது. ரயில் நிலைய நுழைவு வாயில் இருந்து நடைமேடைக்கு நடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். மேலும் மூத்த குடிமக்களின் பேக்குகளை எடுத்து செல்ல போர்ட்டர்களும் உள்ளனர்.
பேட்டரி வாகனங்கள் (கோல்ஃப் வண்டிகள்)
நாடு முழுவதும் பல்வேறு பெரிய ரயில் நிலையங்களில் பேட்டரியால் இயக்கப்படும் கார்கள் (கோல்ஃப் வண்டிகள்) இலவசமாக கிடைக்கின்றன. இந்த வண்டிகள் ரயில்களின் வாசலுக்கே வந்து விடுவதால் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக நேரம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை.
சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள்
இந்தியாவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பயணிகளுக்காக ரயில் நிலையங்களில் தனி டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மூத்த குடிமக்கள் வரிசையில் நிற்க அவசியமின்றி விரைவாக டிக்கெட்டுகளை பெற முடியும்.
உள்ளூர் ரயில்களிலும் ஸ்பெஷல் சீட்கள்
மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களின் புறநகர் ரயில்களின் பயன்பாடு அதிகம் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த ரயில்களில் சீட் கிடைப்பது குதிரை கொம்பு தான். ஆகையால் உள்ளூர் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வசதி காரணமாக மூத்த குடிமக்கள் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டிய சிரமம் இருக்காது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

