- Home
- Business
- ரயிலில் குழந்தைகளுக்கு 'இந்த' வயது வரை பாதிக் கட்டணம்..! இந்த சலுகை உங்களுக்கு தெரியுமா?
ரயிலில் குழந்தைகளுக்கு 'இந்த' வயது வரை பாதிக் கட்டணம்..! இந்த சலுகை உங்களுக்கு தெரியுமா?
Indian Railways Child Ticket Rules: ரயில்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கான சலுகைகள் என்ன? எந்த வயது வரை குழந்தைகளுக்கு பாதிக் கட்டணம் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

சலுகைகளை வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே
இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றான இந்தியன் ரயில்வே தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களை இயக்கி வருகிறது.
மேலும் இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரயிலில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பார்ப்போம்.
ரயிலில் குழந்தைகளுக்கான சலுகைகள்
அதாவது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் ரயிலில் பயணிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு தனி இருக்கை (Berth) அல்லது இருக்கை (Seat) தேவையில்லை என்றால், இலவசமாகப் பயணம் செய்யலாம். அந்த குழந்தைக்கு டிக்கெட் வாங்கத் தேவையில்லை. அதே வேளையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்குத் தனி பெர்த் வேண்டும் என விரும்பினால் அந்தக் குழந்தைக்கு பெரியவர்களுக்கான முழுக் கட்டணம் வசூலிக்கப்படும்.
5 வயது முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு பாதிக் கட்டணம்
5 வயது முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு பெர்த் தேவையில்லை என்றால் அந்த குழந்தைகள் ரயிலில் பாதிக் கட்டணத்தில் அல்லது பெரியவர்களை விட குறைக்கப்பட்ட கட்டணத்தில் பயணிக்க முடியும். அதே வேளையில் 5 வயது முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு பெர்த் வேண்டும் என விரும்பினால் அந்த குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்ன கட்டணம்?
குழந்தைகளுக்கான சலுகை கட்டணம் நீங்கள் முன்பதிவு செய்யும் ரயில்களின் வகை (அதி விரைவு, சாதாரண எக்ஸ்பிரஸ்), முன்பதிவு பெட்டிகளின் வகை (ஏசி கோச், ஏசி அல்லாத சாதாரண கோச்) ஆகியவற்றை பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ரயிலில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகவே கருதப்படுவார்கள். ஆகவே 12 வயதுக்கு மேற்படவர்களுக்கு ரயிலில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளில் முழுக் கட்டணமே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.