MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சொந்த வீடு கனவு இனி நனவாகும்.. மத்திய அரசின் அதிரடி பரிசு.. ரூ.1.80 லட்சம் மானியம் பெறுவது எப்படி?

சொந்த வீடு கனவு இனி நனவாகும்.. மத்திய அரசின் அதிரடி பரிசு.. ரூ.1.80 லட்சம் மானியம் பெறுவது எப்படி?

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் மிதப்பவர்களுக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா - நகர்ப்புறம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Mar 16 2026, 03:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மத்திய அரசு திட்டம்
Image Credit : Getty

மத்திய அரசு திட்டம்

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற லட்சியத்தை அடையத் துடிக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்காக, மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா - நகர்ப்புறம் (PMAY-U) 2.0 திட்டத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் இனி கவலையின்றி தங்கள் சொந்த இல்லக் கனவை நனவாக்கலாம்.

வீட்டுக்கடன் திட்டம்

திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சலுகைகளை பொறுத்தவரை மத்திய அரசின் இந்த மேம்படுத்தப்பட்ட திட்டமானது, வீட்டுக் கடன் வட்டிச் சுமையைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. ₹35 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடுகளுக்கு, ₹25 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுபவர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம்.

வட்டி மானியம்: நீங்கள் வாங்கும் கடனில் முதல் ₹8 லட்சத்திற்கு 4% வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

நேரடிப் பலன்: தகுதியுள்ள பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளில் தவணை முறையில் மொத்தம் ₹1.80 லட்சம் வரை மானியமாக அவர்களின் கணக்கில் நேரடியாகச் சேரும்.

24
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Image Credit : Asianet News

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்:

EWS (பொருளாதாரத்தில் நலிந்தவர்கள்): ஆண்டு வருமானம் ₹3 லட்சம் வரை உள்ளவர்கள்.

LIG (குறைந்த வருமானப் பிரிவினர்): ஆண்டு வருமானம் ₹3 லட்சம் முதல் ₹6 லட்சம் வரை உள்ளவர்கள்.

MIG (மத்திய வருமானப் பிரிவினர்): ஆண்டு வருமானம் ₹6 லட்சம் முதல் ₹9 லட்சம் வரை உள்ளவர்கள்.

Related Articles

Related image1
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 35% சம்பள உயர்வு?.. 8th Pay Commission சூப்பர் அப்டேட்!
Related image2
வீட்டுக்கடன் முதல் மருத்துவ செலவு வரை.. நடுத்தர மக்களுக்கு நிம்மதி கொடுக்கும் அப்டேட் வருமா?
34
பயன் பெறும் 4 முக்கிய வழிகள்
Image Credit : Getty

பயன் பெறும் 4 முக்கிய வழிகள்

இந்தத் திட்டம் வெறும் கடன் மானியத்தோடு மட்டும் நின்றுவிடாமல், நான்கு கோணங்களில் உதவி செய்கிறது:

சொந்த நிலத்தில் நீங்களே வீடு கட்டிக் கொள்வது.

அரசு அல்லது தனியார் கூட்டு முயற்சியில் உருவாகும் மலிவு விலை வீடுகளை வாங்குவது.

குறைந்த வாடகையில் குடியிருக்க வசதி செய்தல்.

வங்கிக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி பெறுவது.

44
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Getty

விண்ணப்பிக்கும் முறை

  • இணையதளம்: pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  •  

* உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி லாக்-இன் செய்யவும்.

* குடும்ப வருமானம், வங்கித் தகவல்கள் மற்றும் உங்கள் வருமானப் பிரிவு போன்ற விவரங்களைத் துல்லியமாகப் பதிவிடவும்.

* வருமானச் சான்றிதழ், முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

* நீங்கள் வங்கியில் கடன் பெறும்போது, PMAY-U 2.0 திட்டத்தின் கீழ் மானியம் கோருவதாக வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.

இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 1.18 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, சுமார் 85 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய அரசு
இந்தியா
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏப்ரல் 1 முதல் பாஸ்டேக் கட்டணம் அதிரடி உயர்வு.. புதிய ஆண்டு பாஸ் விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image2
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 35% சம்பள உயர்வு?.. 8th Pay Commission சூப்பர் அப்டேட்!
Recommended image3
ஒரே வீட்டில் இனி இரண்டு கேஸ் கனெக்ஷன் கிடையாது.. சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விபரம் உள்ளே!
Related Stories
Recommended image1
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 35% சம்பள உயர்வு?.. 8th Pay Commission சூப்பர் அப்டேட்!
Recommended image2
வீட்டுக்கடன் முதல் மருத்துவ செலவு வரை.. நடுத்தர மக்களுக்கு நிம்மதி கொடுக்கும் அப்டேட் வருமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved