- Home
- Business
- நகைப்பிரியர்களின் கவனத்துக்கு.. வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? முழு விவரம் இதோ!
நகைப்பிரியர்களின் கவனத்துக்கு.. வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? முழு விவரம் இதோ!
Gold Limit at Home India: இந்தியாவில் ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

தங்கத்துக்கு அதிகரிக்கும் மவுசு
இந்தியாவில் தங்கம் மிகவும் ஆடம்பரமான பொருளாக உள்ளது. நமது நாட்டில் மகக்ள் தங்க நகை மீது அதிகளவு ஈர்ப்பு கொண்டுள்ளதாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கம் விற்பனை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. பலர் பிற்காலத்தில் கைகொடுக்கும் என்று வீட்டில் தங்கத்தை வாங்கி குவித்து வைத்து வருகின்றனர்.
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் ஒரு தனிநபர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான உச்சவரம்பு ஏதும் இல்லை. ஆனால் நீங்கள் வைத்திருக்கும் தங்கத்திற்கு முறையான ஆவணங்கள் இருந்தால் அல்லது அந்த தங்கம் உங்களின் வருமான வரித் தாக்கல் (ITR) மற்றும் சேமிப்பிற்கு உட்பட்டது என்று உங்களால் நிரூபிக்க முடிந்தால், நீங்கள் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் தாராளமாக வைத்திருக்கலாம்.
சட்டம் சொல்வது என்ன?
வருமான வரித்துறை சோதனையின் போது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கம் வரையிலும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கம் வரையிலும், ஆண்கள் 100 கிராம் வரையிலும் தங்கம் வைத்திருந்தால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்ய மாட்டார்கள் என சட்டம் சொல்கிறது.
முறையான ஆவணங்கள் இருப்பது அவசியம்
ஆனால் முறையான ஆவணங்கள், பில்கள் இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் வைத்திருக்கலாம். இதற்கு எந்தவித உச்சவரம்பும் இல்லை. உங்களுக்குப் பரம்பரையாக வந்த தங்கம் அல்லது நெருங்கிய உறவினர்களிடமிருந்து பரிசாகப் பெற்ற தங்கத்திற்கும் முறையான ஆதாரங்கள் உதாரணமாக உயில் அல்லது அன்பளிப்பு இருந்தால் மிகவும் பாதுகாப்பானது.
தங்க இருப்புக்கு உச்சவரம்பு இல்லை
தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் வீட்டில் தங்கம் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல, அந்தத் தங்கத்தை வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது? அதற்கான உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்பதே முக்கியமாகும். ஆகவே ஆவணங்கள் இருந்தால் நீங்கள் வீட்டில் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் வைத்திருக்க முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

