இந்த வங்கியில் இனி பணம் எடுக்க முடியாது.. ஆர்பிஐயின் அதிரடி உத்தரவு.!!
வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து அதிகபட்சமாக ரூ.35,000 மட்டுமே எடுக்க முடியும். வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை என்றும், நிதி நிலைமை சீரடையும் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

ஆர்பிஐ தடை
நிதித் தட்டுப்பாடு மற்றும் திரவத் திறன் குறைவு காரணமாக வங்கியின் நிதி நிலைமை கவலைக்குரியதாக இருந்தது. வங்கி வைப்பாளர்களின் நலனைக் காக்கவும், கண்காணிப்பு சார்ந்த சிக்கல்களை சரிசெய்யவும் ஆர்பிஐ இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். தற்போதைய ஆர்பிஐ அறிவிப்பின்படி, வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு அல்லது கரண்ட் கணக்குகளில் அதிகபட்சம் ரூ.35,000 மட்டுமே எடுக்க முடியும்.
வங்கிக் கணக்கு தடை
ஆனால் ஊழியர் சம்பளம், அலுவலக வாடகை, மின்சாரச் செலவு போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு வங்கி பணம் பயன்படுத்த அனுமதி உண்டு. மேலும், DICGC விதிகளின்படி, எந்த வாடிக்கையாளரும் தங்களது வைப்புத் தொகையில் ரூ.5 லட்சம் வரை காப்புறுதி தொகையைப் பெறலாம். தேவையான ஆவணச் சரிபார்ப்புகளுக்குப் பிறகு, இந்த சேவை ஒவ்வொரு கணக்குதாரருக்கும் கிடைக்கும்.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, நாசிக் மாவட்ட மகளிர் வளர்ச்சி சகாரி வங்கி லிமிடெட் மீது வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949ன் பல பிரிவுகளின் கீழ் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, வங்கிக்கு ஆர்பிஐ அனுமதி இன்றி கடன் வழங்கவும், புதுப்பிக்கவும் அனுமதி இல்லை. புதிய முதலீடுகள், புதிய டெபாசிட்கள் ஏற்குதல், சொத்துக்கள் வாங்குதல் அல்லது விற்பனை செய்தல் என அனைத்து நடவடிக்கைகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கி பிரச்சனை
எனினும், ஆர்பிஐ விளக்கத்தில், வங்கியின் லைசன்ஸ் ரத்து செய்யப்படவில்லை என்றும், வங்கியின் நிதிநிலை மேம்படும் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறியுள்ளது. வங்கியின் செயல்திறன் மேம்படும்போது மட்டுமே இந்தத் தடை நீக்கப்படும். இதற்கிடையில், வங்கி ஆர்பிஐ உத்தரவுகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

