- Home
- Auto
- ரூ.57,750க்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. டெலிவரி செய்பவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. உடனே வாங்குங்க
ரூ.57,750க்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. டெலிவரி செய்பவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. உடனே வாங்குங்க
குவாண்டம் பிசினஸ் எக்ஸ்எஸ் என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. டெலிவரி பணியாளர்களைக் குறிவைத்து, பேட்டரி-ஸ்வாப்பிங் (BaaS) மாடலில் வெறும் ரூ. 57,750 என்ற விலையில் இது கிடைக்கிறது.

ரூ.57,750 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் தேவை தினந்தோறும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.106 கொடுத்து 50 கிலோமீட்டர் மட்டுமே ஓடும் ஸ்கூட்டரை விட, ஒரு முழு சார்ஜில் 100 கிமீ வரை செல்லும் EVகள் மத்தியிலும் விரைவாக பிரபலமாகின்றன. பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதால், மொபைல் போன் சார்ஜ் செய்வதைப் போல இதற்கும் பழகிக் கொண்டால் பயணச் செலவு குறையும். குறிப்பாக, டெலிவரி பணியாளர்களை குறியிட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைந்த விலையில் புதுப்புது எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மார்க்கெட்டில் காலடி எடுத்து வைத்துள்ளது ‘குவாண்டம் பிசினஸ் எக்ஸ்எஸ்’என்ற புதிய மின்சார ஸ்கூட்டர்.
குவாண்டம் பிசினஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இதற்குக் காரணம், இந்த ஸ்கூட்டர் Battery-as-a-Service (BaaS) மாடலில் விற்கப்படுவது. அதனால் ஆரம்ப முதலீடு பராமரிப்பு செலவும் பாரம்பரிய பேட்டரி மாடல்களை விட குறைவு. இந்த ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு Indofast Energy ரூ.999 முதல் தொடங்கும் ‘எனர்ஜி பிளான்கள்’ மற்றும் ரூ.1,499 முதல் தொடங்கும் இஎம்ஐ வசதியையும் வழங்குகிறது. நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பேட்டரி ஸ்வாப் நிலையங்கள் உள்ளதால், இரண்டு நிமிடங்களில் பேட்டரியை மாற்றிக்கொள்ள முடியும். இதனால் நீண்ட நேரம் சார்ஜ் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ரேஞ்ச் அன்க்சைட்டி எனப்படும் பயமும் குறையும். வணிக XS, நீடித்த நிலைத்தன்மையும், செயல்திறனும், சுற்றுச்சூழல் நட்பும் கொண்டதாக நிறுவனம் கூறுகிறது.
மலிவு விலை ஸ்கூட்டர்
2025–26 நிதியாண்டில் 1,000 Business XS மாடல்களை வழங்குவது Indofast நிறுவனத்தின் இலக்கு. அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,000 யூனிட்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல், முன்பு வந்த Business X அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. குவாண்டம் எனர்ஜி தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மற்றும் இண்டோஃபாஸ்ட் எனர்ஜி பேட்டரி மாற்றும் நெட்வொர்க்கின் ஆதரவுடன், இந்த ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குவாண்டம் பிசினஸ் XS எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ. 57,750 ஆகும். Business X மாடல் (BaaS இல்லாமல்) தற்போது ரூ.95,009க்கு விற்கப்படுகிறது. அது 1.5 kW சக்தி உற்பத்தி செய்யும் திறன், முன்-பின் டிரம் பிரேக், கம்பைன் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற வசதிகளைக் கொண்டது.

