- Home
- Cinema
- தொலைக்காட்சி
- வில்லி தான் ஜெயிக்கிறாள்! 'கார்த்திகை தீபம்' சீரியல் கதையால் ரசிகர்கள் கொதிப்பு: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
வில்லி தான் ஜெயிக்கிறாள்! 'கார்த்திகை தீபம்' சீரியல் கதையால் ரசிகர்கள் கொதிப்பு: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
Karthigai Deepam Serial Fans Troll and Review Rating : ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Karthigai Deepam Rating
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இப்போது 2ஆவது பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் பாகத்திற்கு ஏன் வரவேற்பு கிடைத்தது என்றால், கார்த்திக் மற்றும் தீபாவின் லவ் காட்சிகள், புரிதல் மட்டுமின்றி குடும்பத்திற்குள்ளேயே இருந்த வில்லி என்று காட்சிகளும் சரி, கதாபாத்திரங்களும் சரி சீரியலை வெற்றியடைச் செய்தது.
Fans Upset Serial Plot, Serial Controversy,
இதன் காரணமாக ரசிகர்களும் 2ஆவது பாகத்தை பார்க்க தொடங்கினர். ஆனால், நாளுக்கு நாள் கார்த்திகை தீபம் சீரியலில் வில்லத்தனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கார்த்திக் டம்மியாக்கப்படுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு வந்துள்ளது. அதோடு ரேவதியை விட்டு கார்த்திக் பிரிந்து சென்றது, மாமியாரே மருமகனை பலி வாங்குவது என்று காட்சிகள் அமைக்கப்பட்டு சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
Chandrakala Plot, Karthigai Deepam Review
ஒவ்வொரு நாளும் கார்த்திகை தீபம் சிரீயலின் புரோமோ வெளியாகும் போதே ரசிகர்கள் பலரும் அதனை விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அப்படி என்ன விமர்சிக்கிறார்கள் என்றால், எங்க பொருமைய ரொம்ப சோதிக்கீறீங்க. கார்த்திக்க அசிங்க படுத்துறீங்க.
Karthik Role in Karthigai Deepam Serial
சத்தியமா சொல்றேன் கார்த்திக்காக மட்டும் தான் இந்த சீரியல் பாக்குறோம் நானும் சொல்ல வேண்ணாம் தான் நினைச்சேன் ஆனால் முடியல நல்லாவே இல்ல. ரொம்ப கேவலமாக இருக்கிறது. Karthik pls quit this serial. கதை ரொம்ப மோசமா இருக்கு. நல்லாவேயில்லை sir. Serial going very bad. கார்த்திகை தீபம் என்ற சீரியலுக்கு ஒரு brand இருக்குது தயவு செய்து எடுத்ததே திரும்பி திரும்பி எடுக்காதீங்க கொஞ்சமா புதுசா யோசிங்கஎன்றெல்லம் விமர்சித்துள்ளனர்.
Karthigai Deepam Villain Wins
இன்றைய எபிசோடில் சந்திரகலாவை கொலை செய்ய முயற்சி செய்ததாக சாமூண்டீஸ்வரி கார்த்திக் மீது போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கார்த்திக்கை கைது செய்து லாக்கப்பில் அடைத்தனர். ஏற்கனவே சிவனாண்டி, காளியம்மாள் மற்றும் முத்துவேல் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில் சந்திரகலாவின் சதியை புரிந்து கொள்ளாத சாமுண்டீஸ்வரி இப்போது கார்த்திக்கை கைது செய்ய வைத்துள்ளார்.
Karthigai Deepam Fans Troll
அதோடு நல்ல லாபத்தை கொடுத்து வந்த தனது பேக்டரியையும் ஏலத்தில் விற்க முன் வந்துள்ளார். எப்படியும் இந்த பேக்டரியை கார்த்திக் தான் வாங்கி அதனை தனது அண்ணன்கள் மூலமாக நிர்வாகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.