வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! நவரச நாயகன் கார்த்திக் உடல்நலம் குறித்த சமீபத்திய தகவல்!
Navarasa Nayagan Karthik Health Rumours : நவசர நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Actor Karthik Fake News, Karthik Navarasa Nayagan
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். கடந்த 1960ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தார். சினிமா பின்னணியை வைத்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அறிமுக படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருககன தமிழ்நாடு மாநில விருது பெற்றார். இந்தப் படத்திற்கு பிறகு இளஞ்ஜோடிகள், நேரம் வந்தாச்சு, கேள்வியும் நானே பதிலும் நானே, கண்ணே ராதா, ராஜ மரியாதை, ஒரே ரத்தம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நவரச நாயகன் என்று அழைக்கப்படுகிறார்.
Karthik Sickness News, Karthik Health Rumours Debunked
குறுகிய காலத்திலேயே சினிமாவில் புதிய உச்சம் தொட்டார். அதே அளவிற்கு சினிமாவில் சரிவையும் எதிர்கொண்டார். இதற்கு அவரது மது பழக்கமே காரணமாக சொல்லப்பட்டது. பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கார்த்திக்கின் கால்ஷீட்டை நம்பி ஏமாறவும் செய்திருக்கிறார்கள் என்று பிரபலங்கள் பலரும் பேட்டியளித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், அவருக்கு நுரையீரல் தொடர்பான சில சிறிய உடல்நலக் குறைவுகள் இருந்தன. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும், சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக இருப்பதாகவும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
Karthik Health Update, Karthik Current Status
இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திக்கின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இது குறித்து அவரது மகன் கௌதம் கார்த்திக் விளக்கமும் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் கார்த்திக் தனது வீட்டில் நின்று கொண்டு சேரை தூக்கி எறிந்து கோட் சூட் அணிந்த நிலையில் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதோடு அந்த வீடியோ இரவு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை நடிகரும், மூத்த பத்திரிக்கையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.