இந்தி திணிப்புக்கு எதிராக சீறும் சிவகார்த்திகேயன்! பட்டைய கிளப்பும் 'பராசக்தி' டிரெய்லர்!
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இப்படம், ஒரு சாமானியன் எப்படி ஒரு புரட்சித் தலைவனாக மாறுகிறான் என்பதை விவரிக்கிறது.

பராசக்தி டிரெய்லர்
பொங்கல் ரேசில் விஜய்யின் 'ஜன நாயகன்' படத்துடன் மோதத் தயாராகி வரும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் அதிரடியான டிரெய்லர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
60-களின் கதைக்களம்
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், 1960-களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 200 வினாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில், ஒரு சாமானிய மனிதனாக இருக்கும் சிவகார்த்திகேயன், எப்படி ஒரு மாபெரும் மாணவர் புரட்சியின் தலைவனாக மாறுகிறார் என்பது மிக நேர்த்தியாகக் காட்டப்பட்டுள்ளது.
மிரட்டும் கூட்டணி
சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் வில்லனாக ரவி மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதர்வா மாணவர் தலைவராகவும், ரவி மோகன் அதிகாரமிக்க காவல்துறை அதிகாரியாகவும் மிரட்டியுள்ளனர்.
இது ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 'அடி அலையே', 'ரத்னமாலா' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில், டிரெய்லரில் பின்னணி இசை தெறிக்கவிட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டத்தில் 'பராசக்தி உலகம்'
படத்திற்காகச் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 60-களின் காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டது. பழைய காலத்து ரயில்கள், கார்கள் மற்றும் ரயில் நிலைய செட் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்காகக் கண்காட்சியாக வைக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
பொங்கல் ரிலீஸ்
நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. வரும் ஜனவரி 10-ம் தேதி பொங்கல் விடுமுறையை முன்னிட்டு உலகம் முழுவதும் 'பராசக்தி' திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

