பராசக்தி முதல் விமர்சனம்: பிளாக்பஸ்டரா? ஜன நாயகனுக்கு போட்டியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்குமா?
Sivakarthikeyan Parasakthi Movie First Review in Tamil : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி படம் எப்படி இருக்கிறது, ஹிட் கொடுக்குமா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Parasakthi First Review Tamil
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் பராசக்தி. முழுக்க முழுக்க ஹிந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்திய இந்தப் படம் 1964ல் நடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப காஸ்டியூம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 25ஆவது படம். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜிவி பிரகாஷிற்கு 100ஆவது படம்.
Sivakarthikeyan Parasakthi Movie Public Response
முதலில் இந்தப் படம் சூர்யாவிற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் கைவிடப்பட்டு சிவகார்த்திகேயனுக்காக கதை உருவாக்கப்பட்டு இப்போது 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முதலில் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் வசூலை கருத்தில் கொண்டு படத்தை 10ஆம் தேதி வெளியிட முடிவு செய்தனர். அதன்படி வரும் 10ஆம் தேதி சனிக்கிழமை பராசக்தி படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கு சென்சார் சர்ஃட்டிபிகேட் பிரச்சனை இருந்து வரும் நிலையில், படத்தின் வெளிநாட்டு சான்றிதழ் முடிந்து படம் வெளியாக இருக்கிறது.
Sivakarthikeyan Parasakthi Movie Public Response
இதற்கிடையில் படத்தை ப்ரீ ஷோவில் பார்த்த பலரும் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், பராசக்தி படம் ஹிட் கொடுக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை விநியோகம் செய்கிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் 41 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி என்று சொல்லப்படுகிறது. ஜன நாயகனுக்கு போட்டியாக வரும் பராசக்தி பொங்கல் ரேஸில் ஜெயிக்குமா? பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.