- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சொந்த பந்தங்கள் சூழ ஜேஜேவென நடந்த விழா! தாய்மாமன் கடமையை கச்சிதமாக முடித்த KPY சரத்!
சொந்த பந்தங்கள் சூழ ஜேஜேவென நடந்த விழா! தாய்மாமன் கடமையை கச்சிதமாக முடித்த KPY சரத்!
KPY Sarath Sister Son and Daughter Ear Piercing Ceremony: விஜய் டிவியின் மூலம் பிரபலமான சரத் தாய் மாமனாக தன் அக்கா குழந்தைகளுக்கு வைத்து காது குத்தியுள்ள செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

KPY SARATH HOUSE FUNCTION
உடல்மொழி: சரத்தின் தனித்துவமான உயரமும், அதற்கு நேர்மாறான அவரது அப்பாவித்தனமான பாவனைகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. மொட்டை ராஜரந்திரனின் மகன்: கே பி ஒய் சரத் மொட்டை ராஜேந்திரன் போல்தான் நடிப்பார். ஏனென்றால் அவர் தலை மற்றும் முகம் உடல் அனைத்தும் அப்படியே மொட்டை ராஜேந்திரன் போலவே இருக்கும் .மொட்டை ராஜேந்திரன் மகன் போல் இருக்கிறார் என்றும் ஒரு சிலர் கூறி இருக்கின்றனர். சீசன் 5-ல் ஒரு போட்டியாளராக அறிமுகமானார். குறிப்பாக தீனாவுடன் இவர் இணைந்த "சரத்-தீனா" காம்போ மிகப்பெரிய ஹிட் அடித்தது. இருவரும் சேர்ந்து காமெடி திறமையில் தமிழகத்தையே கட்டி போட்டனர் என்று சொல்லலாம்.
காதணி விழா:
மிஸ்டர் அண்ட் மிஸஸ்: மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3ன் டைட்டில் வின்னரே கேபிஒய் சரத் அவரது மனைவி கிருத்திகா தான் இவர்கள் இருவரும் அந்த போட்டியில் மிகத் திறமையாக விளையாண்டனர். இவருக்கு போட்டியாக பலர் முன்னணி சின்னத்திரை நடிகர்களும் இதில் கலந்து கொண்டனர் ஆனால் கே பி ஒய் சரத் மற்றும் கிருத்திகாவே டைட்டில் அடித்தனர்.
காதணி விழா: விஜய் டிவி பிரபலம் சரத் (KPY Sarath) தனது அக்கா மகளுக்கு தாய் மாமன் என்ற முறையில் மிகச் சிறப்பாகக் காது குத்தும் விழாவை நடத்தி முடித்துள்ளார். கடந்த வாரத்தில் அதிக அளவில் பிரபலங்களின் குடும்ப விழாக்கள் இருந்தது அதில் ஒன்றாக கே பி ஒய் சாரத்தின் குடும்ப விழாவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
Also Read This : அனிருத்-க்கே டஃப் கொடுப்பார் போலயே! குறுகிய காலத்தில் கோடீஸ்வரரான சாய் அபயங்கர்! ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா?
சொந்த பந்தங்களுடன் சரத்:
தாய் மாமனின் கடமை: காது குத்தும் போது முறைப்படி குழந்தையைத் தனது மடியில் அமரவைத்து, ஒரு தாய் மாமனாகத் தனது கடமையைச் செய்து நெகிழ்ச்சியடைந்தார்.முறைப்படி தனது அக்கா மகன் மற்றும் மகளுக்கு செய்ய வேண்டிய சீர் வரிசைகளை சரத் மிக பிரம்மாண்டமாகச் செய்திருந்தார். இந்த விழாவில் சரத்தின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் சின்னத்திரை நண்பர்கள் பலரும் குறிப்பாக kpy தீனா கலந்து கொண்டார். அனைவரும் குழந்தைகளை வாழ்த்தினர்.
சரத்தின் நெகிழ்ச்சியான பதிவு:
சரத் தனது Instagram பக்கத்தில் இந்த காதணி விழா பற்றி கூறியிருப்பதாவது: என் மருமகன் & மருமகள் காதணி விழா சிறப்பாக முடிந்தது விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய அனைத்து நல் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி ❤️✨
தாய்மாமனாக நான் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கா மீது அவர் வைத்திருக்கும் பாசத்தையும், அந்த குழந்தையின் மீதான அன்பையும் அந்த புகைப்படங்கள் வெளிப்படுத்தினார் KPY சரத்.