MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முத்துவேலுவின் கையை பிடித்து கதறி அழுத பாண்டியன்! கேள்விக்குறியான மயிலின் வாழ்க்கை:பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் டுவிஸ்ட்!

முத்துவேலுவின் கையை பிடித்து கதறி அழுத பாண்டியன்! கேள்விக்குறியான மயிலின் வாழ்க்கை:பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் டுவிஸ்ட்!

Pandiyan and Muthuvel Reunion Scene Pandian Stores 2 : ஜாமீனில் வெளியில் வந்த பாண்டியன் சாதகமாக சாட்சி சொன்ன முத்துவேலுவின் கையை பிடித்து கதறி அழுதுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 04 2026, 05:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Pandian Stores 2 Serial This Week Promo Video
Image Credit : Jio Hot Star

Pandian Stores 2 Serial This Week Promo Video

தங்களது கடையில் வேலை பார்த்து கோமதியை திருமணம் செய்ததால் பாண்டியனை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எதிரியாகவே முத்துவேல் பிரதர்ஸ் நினைத்து வந்தனர். எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று பல வழிகளில் எல்லாம் பாண்டியனுக்கு குடஞ்சல் கொடுத்தனர். அப்படியே இருவீட்டாரும் சென்ற நிலையில் தான் அரசியை வைத்து பாண்டியனை பழி வாங்க திட்டம் போட்டு கடைசியில் அந்த பிரச்சனை கோர்ட்டு வரை சென்றது. இதில் அரசி மட்டும் அன்று கூண்டில் குமரவேலுவிற்கு எதிராக சாட்சி சொல்லியிருந்தால், இந்த நேரம் குமரவேல் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்.

27
Thangamayil Future is in Danger Zone
Image Credit : Jio Hot Star

Thangamayil Future is in Danger Zone

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும், தன்னை காப்பாற்றிய அரசி காலில் விழுந்து குமரவேல் மன்னிப்பு கேட்டார். இந்த சூழலில் தான் இன்று பாண்டியனை காப்பாற்றிய முத்துவேல் கையை பிடித்து பாண்டியன் கதறி அழுதுள்ளார். அது ஏன் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பாக்கியம் மற்றும் தங்கமயில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர், ராஜீ மற்றும் அரசி ஆகியோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

37
Pandiyan Stores 2 Today Episode Twist
Image Credit : Jio Hot Star

Pandiyan Stores 2 Today Episode Twist

இதைத் தொடர்ந்து அவர்களிடம் ச்தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் அக்கம் பக்கத்தாரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றின் அடிப்படையிலும் முத்துவேல் பிரதர்ஸ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ராஜீ மற்றும் அரசி மட்டும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், மற்ற அனைவரது மீதும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு கோமதி ஒரு ஜெயிலிலும், பாண்டியன், செந்தில், கதிர், சரவணன் ஆகியோர் ஒரு ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

47
Pandiyan and Muthuvel Reunion Scene
Image Credit : Jio Hot Star

Pandiyan and Muthuvel Reunion Scene

இந்த நிலையில் தான் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கான புரோமோ வீடியோவில் கோர்ட் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில், முதலில் பாக்கியத்திம் நீதிபதி விசாரணை நடத்துகிறார். அதற்கு பாண்டியன் பதிலளிக்கும் காட்சியும், பின்னர் முத்துவேல் பிரதர்ஸ் சாட்சி சொல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. முதலில் பேசிய முத்துவேல் கூறுகையில், இதில், வீட்டிற்கு வந்து கொடுமைப்படுத்தும் அளவிற்கு என்னுடைய தங்கச்சி குடும்பம் அப்படி ஒன்றும் மோசமான குடும்பம் இல்லை என்று கூறினார்.

57
Thangamayil Secret Exposed in Pandiyan Stores 2
Image Credit : Jio Hot Star

Thangamayil Secret Exposed in Pandiyan Stores 2

இவரைத் தொடர்ந்து சக்திவேல் பேசுவதற்கு கூண்டில் ஏறுகிறார். அவரைப் பார்த்ததும் பாக்கியத்திற்கு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால், அவர் தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சொன்னார். அவரது பேச்சைக் கேட்டு பாக்கியமும் போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதை கேட்டு பாக்கியம் மற்றும் மாணிக்கம் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

67
Pandiyan Cries to Muthuvel Emotional Scene
Image Credit : Jio Hot Star

Pandiyan Cries to Muthuvel Emotional Scene

இதைத்தொடர்ந்து முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரது சாட்சிகளின் அடிப்படையில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர் ஆகியோர் சிறையிலிருந்து வெளியில் வருகின்றனர். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் கையெழுத்து போட்ட பிறகு ஸ்டேஷனை விட்டு வெளியில் வரும் போது முத்துவேல் கையை பிடித்து கொண்டு பாண்டியன் கதறி அழுதார். இதே போன்று இக்கட்டான சூழ்நிலையில் என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றுனீங்களே எனக்கு இது போதும் அண்ணே என்று கூறி அவரது மார்பில் சாய்ந்து அழுகிறார்.

77
Vijay TV Serial Pandiyan Stores 2 Latest Update 2026
Image Credit : Jio Hot Star

Vijay TV Serial Pandiyan Stores 2 Latest Update 2026

அதோடு அந்த புரோமோ வீடியோ முடிகிறது. இனிமேல் மயில் இனி அந்த வீட்டில் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கமயிலின் வாழ்க்கை கேள்விக்குறியானது தான் மிச்சம். இனிமேல் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? பாண்டியன் குடும்பத்தினர் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில் தங்கமயில் மற்றும் பாக்கியம் என்ன செய்ய போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Akhanda 2 OTT Release: தியேட்டரை தொடர்ந்து ஓடிடி-யை அதிரவைக்க வரும் அகண்டா 2!
Recommended image2
கணவர் வீட்டில் பொங்கல் வச்சு மயில்வாகனத்தின் ஐடியாவால் மாட்டிக்கிட்ட சின்ன அத்தை: கார்த்திக்கின் ரிவெஞ்ச் கார்த்திகை தீபம்!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸில் ஜெயிக்குமா ஜன நாயகன்? பழைய கதையில் புதுமையான அரசியல் டயலாக்ஸ் - ரசிகர்களின் ரியாக்‌ஷன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved