46 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த டிடி காக், ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்சர்களுடன் விளாசினார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸுடன் இணைந்து அற்புதமான தொடக்கத்தை அளித்தார். இந்திய பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்க விட்டார். அர்ஷ்தீப் மற்றும் பும்ரா ஓவரில் சிக்சர்களை பறக்க விட்டார்.
குயின்டன் டி காக் அதிரடி
பின்பு ஹென்ரிக்ஸ் 8 ரன்னில் வருண் சக்கரவர்த்தி பந்தில் வீழ்ந்தார். இரு பேட்ஸ்மேன்களும் தொடக்க விக்கெட்டுக்கு நான்கு ஓவர்களில் 38 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து அற்புதமாக ஆடிய டி காக் 26 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். தொடக்கத்தில் நிதானம் காட்டிய எய்டர் மார்க்ரம் வருண் பந்தில் தொடர்ந்து 2 சிக்சர்கள் விளாசினார். ஆனால் அதே ஓவரில் வருண் மார்க்ராமை (26 பந்துகளில் 29) வெளியேற்றி பதிலடி கொடுத்தார்.
சதத்தை தவற விட்டார்
மறுபக்கம் சூப்பராக விளையாடி சதத்தின் விளிம்பில் இருந்த டி காக்கை வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சில் ஜிதேஷ் சர்மா ரன் அவுட் செய்து ஆட்டத்தையே மாற்றினார். 46 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த டிடி காக், ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்சர்களுடன் விளாசினார். அடுத்த ஓவரில், திலக் வர்மா அக்சர் படேலின் பந்து வீச்சில் பிரெவிஸை (10 பந்துகளில் 14) வீழ்த்தியபோது தென்னாப்பிரிக்கா பின்னடைவை சந்தித்தது.
கடைசியில் ஜொலித்த மில்லர், பெரோரா
ஆனால் கடைசி கட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய 18வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் உட்பட 15 ரன்கள் எடுத்த டேவிட் மில்லர் மற்றும் டோனோவன் ஃபெரீரா ஆகியோர் தென்னாப்பிரிக்காவை மீண்டும் டாப் கியரில் கொண்டு வந்தனர். அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் மேலும் 16 ரன்களுடன் தென்னாப்பிரிக்கா 200 ரன்களைக் கடந்தது. ஜஸ்பிரித் பும்ரா வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் உட்பட தென்னாப்பிரிக்கா 18 ரன்கள் கூடுதலாக எடுத்து 213 ரன்களை எட்டியது.
அர்ஷ்தீப் சிங், பெரேரா மோசமான பவுலிங்
இந்தியாவைப் பொறுத்தவரை, அர்ஷ்தீப் சிங் நான்கு ஓவர்களில் 54 ரன்களையும், ஜஸ்பிரித் பும்ரா நான்கு ஓவர்களில் 45 ரன்களையும் விட்டுக்கொடுத்தார். வருண் சக்ரவர்த்தி மட்டுமே இந்தியாவுக்காக ஜொலித்தார், நான்கு ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இமாலய இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்கிறது. அர்ஷீப்தீங் ஒரே ஓவரில் 7 வைடுகள் வீசினார். இந்தியா எக்ஸ்டிரா வகையில் மட்டும் 22 ரன்கள் கொடுத்தது.


