MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்

லக்னோவில், தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறி, பொறியாளரான தனது கள்ளக்காதலனை, காதலி ரத்னா தனது இரு மகள்களுடன் சேர்ந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தாய் மற்றும் மகள்களை போலீசார் கைது செய்தனர். 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 11 2025, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
லிவ்இன் வாழ்க்கை
Image Credit : Asianet News

லிவ்இன் வாழ்க்கை

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிரீன் சிட்டி பகுதியில், தனியார் நிறுவனத்தில் பொறியாளர் சூர்ய பிரதாப் சிங் (35) என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் ரத்னா (46) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து ஒரே வீட்டில் லிவ்இன் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

24
ரத்னாவின் மூத்த மகள் மீது ஆசை
Image Credit : Google

ரத்னாவின் மூத்த மகள் மீது ஆசை

ரத்னாவுக்கு 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஒரே வீட்டில் கடந்த வசித்து வந்தனர். ரத்னாவுக்கும், சூர்ய பிரதாப் சிங்குக்கும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சூர்ய பிரதாப் சிங்கிற்கு ரத்னாவின் மூத்த மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை மகள் தாயிடம் கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Related Articles

Related image1
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
Related image2
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
34
சூர்ய பிரதாப் சிங் கொலை
Image Credit : Asianet News

சூர்ய பிரதாப் சிங் கொலை

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ரத்னா தனது மகள்களுடன் இணைந்து சூர்ய பிரதாப் சிங்கை கீழே தள்ளி கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமான முறையில் துடிதுடிக்க கொலை செய்துள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சூர்ய பிரதாப் சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

44
ரத்னா கைது
Image Credit : Google

ரத்னா கைது

இதனையடுத்து ரத்னாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவலை தெரிவித்தார். அதாவது என் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் கொன்றேன் என தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் ரத்னா மற்றும் அவரது இரு மகள்களைக் கைது செய்ததுடன், கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே பணத்திற்காக எனது மகனை கொலை செய்துவிட்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
இந்தியா
பெண்கள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
Recommended image2
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!
Recommended image3
பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்குள் மதத் தீண்டாமை..! ஷியா மசூதிகள் குறிவைக்கப்படுவது ஏன்?
Related Stories
Recommended image1
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
Recommended image2
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved