MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?

அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?

ஓமலூர் அருகே கள்ளக்காதல் தகராறில், உல்லாசத்திற்கு மறுத்த பெண்ணையும், அவரது 10 வயது மகனையும் மேலாளர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாய் படுகாயமடைந்தார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 25 2026, 10:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி கருத்தானூர் பகுதியை சேர்ந்தவர் சத்யா (33). இவரது கணவர் ராஜ்குமார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். சத்யா தனது மகன் மற்றும் மகளுடன் தந்தையின் வீட்டின் வசித்து வந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Google

இந்நிலையில், ஓமலூரில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் சத்யா வேலை செய்து வந்தார். அதே ஷோரூமில் வேலை செய்து வந்த சக்திவேல் (30) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். அவருக்கும், சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. சக்திவேல் அடிக்கடி சத்யாவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

Related Articles

Related image1
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!
Related image2
Mahindra SUVs: புதிய 7 சீட்டர்களை களமிறக்கும் மஹிந்திரா.. புது லுக்கில் கூடுதல் அம்சங்கள்.. விலை எவ்வளவு?
35
Image Credit : Google

நேற்று முன்தினம் இரவு சத்யா வீட்டில் இருந்து உடலில் பலத்த வெட்டு காயங்களுடன், வலது கை மணிக்கட்டு துண்டான நிலையில் கதறியபடி அருகில் வசிக்கும் தந்தையின் வீட்டை நோக்கி ஓடி வந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியபடி வெளியே வந்தனர். மகள் வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்த போது சிறுவன் கிஷாந்த் தலை மற்றும் கழுத்தில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தான்.

45
Image Credit : Asianet News

பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் கிஷாந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சத்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு சக்திவேல் சத்யாவின் வீட்டிற்கு வந்து உல்லாசத்திற்கு அழைத்ததற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

55
Image Credit : our own

அப்போது, சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் கிஷாந்த் எழுந்து வந்து சக்திவேலை வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அரிவாளை எடுத்து கிஷாந்தை வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற சத்யாவையும் வெட்டியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சக்திவேலை தேடி வந்தனர். இதனிடையே போலீஸ்க்கு பயந்து சக்திவேல் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
காவல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Recommended image2
Breaking: தூத்துக்குடி மாணவி கொ**லை வழக்கு..! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடிa
Recommended image3
ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
Related Stories
Recommended image1
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Mahindra SUVs: புதிய 7 சீட்டர்களை களமிறக்கும் மஹிந்திரா.. புது லுக்கில் கூடுதல் அம்சங்கள்.. விலை எவ்வளவு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved