MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Mahindra SUVs: புதிய 7 சீட்டர்களை களமிறக்கும் மஹிந்திரா.. புது லுக்கில் கூடுதல் அம்சங்கள்.. விலை எவ்வளவு?

Mahindra SUVs: புதிய 7 சீட்டர்களை களமிறக்கும் மஹிந்திரா.. புது லுக்கில் கூடுதல் அம்சங்கள்.. விலை எவ்வளவு?

Mahindra SUVs: இந்தியாவின் முன்னணி SUV தயாரிப்பாளரான மஹிந்திரா, தனது பிரபலமான ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 25 2026, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

இந்தியாவின் மிகப்பெரிய SUV தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, நாட்டில் இரண்டு புதிய 7-சீட்டர் SUV-களை களமிறக்க உள்ளது. நீங்கள் ஒரு பெரிய குடும்பத்திற்காக SUV வாங்க திட்டமிட்டிருந்தாலோ அல்லது கூடுதல் அம்சங்கள் கொண்ட கார்களை வாங்க விரும்பினாலோ இதே தேர்வு செய்யலாம். இந்த கார்களின் சிறப்பு அம்சங்கள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

இந்தியாவின் மிகவும் பிரபலமான SUV-களில் ஒன்றான மஹிந்திரா ஸ்கார்பியோ N-க்கு ஒரு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் கொடுக்க மஹிந்திரா நிறுவனம் கடந்த சில காலமாக தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்த காரை 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மஹிந்திரா அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
Fortuner 2026: கெத்து காட்ட வரும் புதிய ஃபார்ச்சூனர்... என்னவெல்லாம் மாறப்போகுது?
Related image2
டஸ்டர் பின் புதிய அதிரடி… Bridger SUV மூலம் ரெனால்ட் இந்தியாவில் மீண்டும் வரவு
37
Image Credit : mahindra

அப்டேட் செய்யப்பட்ட இந்த மாடலின் விலை ரூ.14 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட்டின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால் ஒருசில மாற்றங்கள் மட்டும் இருக்கலாம். புதிய முன்பக்க கிரில், LED DRL-களுடன் கூடிய மெல்லிய LED ஹெட்லைட்கள், அப்டேட் செய்யப்பட்ட பம்பர்கள் மற்றும் புதிய 19 இன்ச் அலாய் வீல்கள் இதில் அடங்கும். ஒட்டுமொத்த தோற்றம் பெரிய அளவில் மாறாது.

47
Image Credit : Asianet News

இந்த SUV-ல் லெவல் 2 ADAS, 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படும். இன்ஜினைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இருக்காது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுடன் கிடைக்கும். குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் 4x4 சிஸ்டமும் தொடரும்.

57
Image Credit : Asianet News

ஸ்கார்பியோ N-ஐத் தவிர, பிரபலமான மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடலுக்கும் ஒரு பெரிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் வரப்போகிறது. இதுவும் 2026 ஆகஸ்ட் மாதம் ஸ்கார்பியோ N உடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.13 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை இருக்கலாம். ஸ்கார்பியோ கிளாசிக் ஃபேஸ்லிஃப்ட்டில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

67
Image Credit : Asianet News

வடிவமைப்பைப் பொறுத்தவரை, இந்த SUV-யின் முன்பக்கத்தில் LED DRL-கள் மற்றும் புரொஜெக்டர் அமைப்புடன் கூடிய மெல்லிய ஹெட்லேம்ப்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரில்லில் செங்குத்தான குரோம் ஸ்லாட்டுகள் மற்றும் புதிய மஹிந்திரா லோகோ இடம்பெறும். பம்பரிலும் சில சிறிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது.

77
Image Credit : Asianet News

பக்கவாட்டில், இந்த SUV-ல் புதிய அலாய் வீல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறத்தில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட LED டெயில் லேம்ப்கள், மேலும் வலுவான பம்பர் மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. மேம்படுத்தப்பட்ட டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் சிறந்த கேபின் தரத்தை மஹிந்திரா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கார்பியோ கிளாசிக் அதே 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கும். இது 130 PS பவரையும், 300 Nm டார்க்கையும் உருவாக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆட்டோ
ஆட்டோ செய்திகள்
மகிந்திரா
மஹிந்திரா எஸ்யூவி கார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tata EV: பெட்ரோல் பங்க் பக்கம் இனி போக வேண்டாம்! டாடா EV கார்களுக்கு ₹3.8 லட்சம் 'மெகா' தள்ளுபடி!
Recommended image2
Auto: பாதுகாப்பில் கோட்டை விட்ட டொயோட்டா கார்! கிராஷ் டெஸ்ட்டில் 'ஜீரோ ஸ்டார்'! எந்த மாடல் தெரியுமா?
Recommended image3
Bike : ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் vs பிளாட்டினா 100 - விலை மற்றும் மைலேஜில் எந்த பைக் பெஸ்ட்?
Related Stories
Recommended image1
Fortuner 2026: கெத்து காட்ட வரும் புதிய ஃபார்ச்சூனர்... என்னவெல்லாம் மாறப்போகுது?
Recommended image2
டஸ்டர் பின் புதிய அதிரடி… Bridger SUV மூலம் ரெனால்ட் இந்தியாவில் மீண்டும் வரவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved