MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

கொளுத்தும் கோடை வெயிலில் ஏசி, ஃபேன் இல்லாமல் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி? நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய வழிகள் முதல் இன்றைய ஸ்மார்ட் ஹேக்ஸ் வரை, வீட்டு வெப்பத்தைக் குறைக்க உதவும் 7 சூப்பர் வழிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 25 2026, 06:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
இயற்கையாகவே வீட்டை குளிர்விக்கலாம்!
Image Credit : chat gpt

இயற்கையாகவே வீட்டை குளிர்விக்கலாம்!

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் கோடை வெயிலடின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஃபேன் மற்றும் ஏசியை மட்டுமே நம்பி இருப்பது மின் கட்டணம் மட்டுமின்றி காற்றையும் வறட்சியாக்கிவிடும். ஆனால், நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக ஸ்மார்ட்டான கட்டிடக்கலை மற்றும் இயற்கையான காற்றோட்டத்தைப் பயன்படுத்தி வீட்டை கூலாக வைத்திருந்தார்கள். ஜன்னல்கள், திரைச்சீலைகள், தரை பராமரிப்பில் சில சின்ன மாற்றங்கள் செய்வதன் மூலம், உங்கள் வீட்டு வெப்பநிலையை சில டிகிரி குறைக்கலாம். இந்த 7 எளிய டிப்ஸ் வீடுகளுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தரும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
வெட்டிவேர் தட்டிகளின் மேஜிக்
Image Credit : chat gpt

வெட்டிவேர் தட்டிகளின் மேஜிக்

தடிமனான கறுப்பு நிற ஸ்க்ரீன்களை விட, பாரம்பரியமான வெட்டிவேர் அல்லது சணல் தட்டிகளைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். மதிய நேரத்தில் இந்த தட்டிகள் மீது கொஞ்சம் தண்ணீர் தெளித்துவிடுங்கள். வெளியில் இருந்து வரும் சூடான காற்று, இந்த ஈரமான தட்டிகள் வழியாக வரும்போது, நீர் ஆவியாகி, வீட்டுக்குள் குளிர்ச்சியான காற்றைக் கொண்டு வரும். இது ஒரு இயற்கையான கூலர் போல் செயல்படுவது மட்டுமல்லாமல், வீட்டில் ஒரு இதமான நறுமணத்தையும் பரப்பும்.

Related Articles

Related image1
பழைய பெட்ஷீட் இருக்கா.. தூக்கி போடாதீங்க.. வீட்டுக்கு புதிய லுக் கொடுக்கும் 5 சூப்பர் ஐடியா!
Related image2
மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்
37
கிராஸ்-வென்டிலேஷன் டெக்னிக்
Image Credit : gemini

கிராஸ்-வென்டிலேஷன் டெக்னிக்

வீட்டை எப்போதும் கூலிங்காக வைத்துக்கொள்ள ஜன்னல்களை எப்போது திறக்க வேண்டும். பகல் நேரங்களில் வெளியில் இருக்கும் அனல் காற்று உள்ளே வராமல் இருக்க ஜன்னல், கதவுகளை இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். சூரியன் மறைந்த பிறகு, வெளி வெப்பநிலை வீட்டுக்குள் இருக்கும் வெப்பநிலையை விடக் குறைந்ததும், வீட்டின் எதிர் எதிர் திசையில் உள்ள ஜன்னல்களைத் திறங்க வேண்டும். இது வீட்டில் தேங்கியுள்ள சூடான காற்றை வெளியேற்றி குளிர்ச்சியான காற்று உள்ளே வர வழிவகுக்கும்.

47
4. செடிகளின் "பச்சை கவசம்"!
Image Credit : unsplans

4. செடிகளின் "பச்சை கவசம்"!

ஸ்நேக் பிளான்ட், மணி பிளான்ட் அல்லது கற்றாழை போன்ற செடிகளை ஜன்னல் அருகே வையுங்கள். செடிகள் 'டிரான்ஸ்பிரேஷன்' (Transpiration) செயல்முறை மூலம் காற்றில் ஈரப்பதத்தை வெளியிடுகின்றன. இது சுற்றுப்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், பால்கனியில் வளர்க்கப்படும் உயரமான செடிகள், சூரியனின் வெப்பம் நேரடியாக சுவரில் படுவதைத் தடுத்து, வீட்டிற்கு ஒரு கவசம் போல செயல்படும்.

57
ஈரத்துணியால் தரையைத் துடைக்கும் மேஜிக்
Image Credit : Freepik

ஈரத்துணியால் தரையைத் துடைக்கும் மேஜிக்

பல வீடுகளில் பயன்படுத்தப்படும் மார்பிள் அல்லது கல் தரைகள், வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்ளும். மதிய நேரத்தில், குளிர்ந்த நீரால் இரண்டு அல்லது மூன்று முறை தரையைத் துடைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தரையில் உள்ள நீர் ஆவியாகும்போது, அறையில் உள்ள வெப்பத்தை அது உறிஞ்சிக்கொள்ளும். இந்த செயல்முறையால், வீட்டுக்குள் இருக்கும் காற்று லேசாகவும், இதமாகவும் இருப்பதை உணர முடியும்.

67
ஃபேனுக்கு முன்னாடி ஐஸ் பவுல்
Image Credit : AI Generated

ஃபேனுக்கு முன்னாடி ஐஸ் பவுல்

ஃபேன் காற்றைக் குளிர்விப்பதில்லை, ஃபேன் காற்று ஏசி போல் கூலாக வர வேண்டும் என்றால், ஒரு பெரிய பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை நிரப்பி, ஃபேனுக்கு முன்னால் வையுங்கள். ஃபேன் அந்த ஐஸ் கட்டிகள் மீது காற்றை வீசும்போது, அது குளிர்ச்சியான நீராவியை அறை முழுவதும் பரப்பும். உங்கள் சீலிங் ஃபேன் 'கவுன்டர்-கிளாக்வைஸ்' (Counter-clockwise) திசையில் சுற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் காற்று நேராகக் கீழ்நோக்கி வீசும்.

77
LED லைட்ஸ் பயன்படுத்துங்கள்
Image Credit : Getty

LED லைட்ஸ் பயன்படுத்துங்கள்

பழைய குண்டு பல்பு மற்றும் டியூப்லைட்கள் அறையில் ஒரு சின்ன ஹீட்டர் போல செயல்பட்டு வெப்பத்தை வெளியிடும். கம்ப்யூட்டர், டிவி, சார்ஜர்கள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் பிளக்கில் இருக்கும்போது வெப்பத்தை உருவாக்குகின்றன. எனவே, வெப்பத்தை வெளியிடாத LED பல்புகளைப் பயன்படுத்துங்கள். பயன்பாட்டில் இல்லாதபோது எலக்ட்ரானிக் சாதனங்களை அன்ப்ளக் செய்துவிடுங்கள். இது வீட்டுக்குள் அனல் அதிகரிக்காமல் தடுக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
காற்று குளிர்விப்பான்
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sofa Makeover: பழைய சோஃபாவை புதுசா மாத்தணுமா? பைசா செலவில்லாமல் புதுசாக்க 5 சூப்பர் ஐடியா!
Recommended image2
Washing Machine Cleaning: வாஷிங் மெஷினில் கெட்ட வாடையா? அழுக்கை நீக்கி புதுசு போல ஜொலிக்க 5 எளிய டிப்ஸ்!
Recommended image3
white shirt care பழுப்பு நிற வெள்ளை உடைகளை பளிச்சென மாற்ற 6 மேஜிக் ஐடியாக்கள்!
Related Stories
Recommended image1
பழைய பெட்ஷீட் இருக்கா.. தூக்கி போடாதீங்க.. வீட்டுக்கு புதிய லுக் கொடுக்கும் 5 சூப்பர் ஐடியா!
Recommended image2
மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved