MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் ஜூலியுடன் முதல் முறையாகக் கைகோர்த்த வருங்கால கணவர்: வைரல் கிளிக்ஸ்!

பிக்பாஸ் ஜூலியுடன் முதல் முறையாகக் கைகோர்த்த வருங்கால கணவர்: வைரல் கிளிக்ஸ்!

Bigg Boss Julie Engaged to Mohammed Ikreem : பிக் பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் வருங்கால கணவர் யார் என்று வெளிப்படுத்தாத நிலையில் தற்போது அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

2 Min read
Rsiva kumar
Published : Dec 11 2025, 07:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Maria Juliana Mohammed Ikreem Engagement
Image Credit : mariajuliana_official Instagram

Maria Juliana Mohammed Ikreem Engagement

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைவரது கவனம் ஈர்த்த ஜூலி விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஊரறிய உலகம் முழுவதும் பிரபலமான பிக் பாஸ் ஜூலிக்கு ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எந்தப் படமும் அவருக்கு பெயரும், புகழும் கொடுக்கவில்லை. இவ்வளவு ஏன் பிக் பாஸ் தாமரைக்கு கிடைத்த வரவேற்பு கூட ஜூலிக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

25
Julie Fiancé Name, Mohammed Ikreem, Bigg Boss Julie Husband
Image Credit : mariajuliana_official Instagram

Julie Fiancé Name, Mohammed Ikreem, Bigg Boss Julie Husband

அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். இந்த நிலையில் தான் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை பகிர்ந்து #Engaged #ISaidYes #Engagement #FutureMrs #FutureMr #Bridetobe#Groomtobe #Love #CoupleGoals என்று ஹெஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார். ஜூலி காதலித்து வந்த அவரது காதலருடன் தான் இப்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ஆனால், அவர் யார் என்ற விவரங்களை வெளியிடவில்லை. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

35
Bigg Boss Julie Bigg Boss Ultimate
Image Credit : mariajuliana_official Instagram

Bigg Boss Julie Bigg Boss Ultimate

ஜூலி பகிர்ந்த புகைப்படங்களோடு என்னுடைய உலகம் முழுவதையும் அர்த்தமுள்ளதாக்கும் மனிதனிடம் மேலும் வெறித்தனமாக இருக்க முடியாது. நான் பிரார்த்தனை செய்த அனைத்தும் அவர் தான். இப்போது அவர் என்றென்றும் என்னுடையவர். மோதிரம் மாற்றிக்கொள்ளப்பட்டது. இதயம் நிறைந்தது. அவரை பார்க்க நீங்கள் காத்திருக்க வேண்டும் ஆனால் இப்போதைக்கு, அவர் தான் எனக்கு ஏற்ற சரியானவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

45
Julie Fiancé Name, Mohammed Ikreem,
Image Credit : mariajuliana_official Instagram

Julie Fiancé Name, Mohammed Ikreem,

இந்த நிலையில் தான் தற்போது நிச்சயதார்த்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் வருங்கால கணவர் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அவர் ஒரு பிஸினஸ்மேன். அவரது பெயர் Mohammed Ikreem. கணவரின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த நிலையில் இப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

55
Maria Juliana Engaged, Bigg Boss Julie Husband
Image Credit : mariajuliana_official Instagram

Maria Juliana Engaged, Bigg Boss Julie Husband

ஆனால், எப்போது திருமணம் என்று அவர் குறிப்பிட்டவில்லை. எப்படியும் வரும் 2026 ஆம் ஆண்டு தான் திருமணம் நடக்கும், பிறக்கும் ஆங்கில புத்தாண்டு ஜூலியின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வருடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Julie (@mariajuliana_official)

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பிக் பாஸ் (தமிழ்)
தமிழ் சினிமா
சினிமா
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!
Recommended image2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!
Recommended image3
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved