மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் 2 படம் உருவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

Siruthai Siva Viswasam,Ajith Family Action Movie
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்று தான் விஸ்வாசம். அப்பா மகள் பாசப்பிணைப்பை பறைசாற்றிய படம். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, யோகி பாபு, தம்பி ராமையா, ஜெகபதி பாபு, விவேக், கோவை சரளா, ரோபோ சங்கர் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்து 2019 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் விஸ்வாசம். ஆக்ஷன் டிராமா கதையை மையப்படுத்திய இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. டி இமான் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
Ajith Siva Reunion, Thala Ajith Next Movie
அஜித்குமாரின் திரைப்படப் பயணத்தில் 'விஸ்வாசம்' (2019) ஒரு பிரம்மாண்டமான குடும்ப வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படமும், அதிலிருந்த தந்தை-மகள் பாசமும் ரசிகர்களிடம் நீங்காத இடம்பிடித்தது. தற்போது, அந்த வெற்றி கூட்டணியான அஜித் மற்றும் இயக்குநர் சிவா இருவரும் மீண்டும் 'விஸ்வாசம் 2' படத்திற்காக இணைய இருப்பதாகச் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
Viswasam 2 Official News, Viswasam 2 Announcement
அஜித் மற்றும் சிவா இருவரும் இதற்கு முன்பு வீரம், வேதாளம், விவேகம், மற்றும் விஸ்வாசம் என நான்கு படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். இதில் விவேகம் தவிர மற்ற படங்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற்றன. 2025-ன் மிகப் பெரிய ஹிட் படமான 'குட் பேட் அக்லி'-க்குப் பிறகு அஜித் ஒரு குடும்ப சென்டிமென்ட் ஆக்ஷன் படத்தில் நடிப்பதை ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள். 'விஸ்வாசம் 2' அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.
Ajith Siva Viswasam 2, Viswasam 2 Update
ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது கேள்வியாக உள்ளது. எனினும் அஜித் இப்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். வரும் 2026 ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் கூட்டணியில் ஏகே 64 படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் குமார் மற்றும் சிவா கூட்டணியில் விஸ்வாசம் 2 படம் உருவாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது. அதுவரையில் இது வெறும் தகவலோ அல்லது விஸ்வாசம் 2 படம் வந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு ஆவலுமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.