தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து போனவர்களை ஒன்று சேர்ப்பதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆர்வம் காட்டாத நிலையில் முன்னாள் தலைவர் அண்ணாமலையை பாஜக மேலிடம் களம் இறக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியைவிட விஜய் கை ஓங்கிட கூடாது என பாஜக சில முக்கிய முடிவுகள் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆகையால், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து போனவர்களை ஒன்று சேர்ப்பதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆர்வம் காட்டாத நிலையில் முன்னாள் தலைவர் அண்ணாமலையை பாஜக மேலிடம் களம் இறக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

செங்கோட்டையன் போன்ற முக்கியமானவர்கள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றதாலும், அடுத்தடுத்து சிலர் பிரிந்து செல்லலாம் என தகவல்கள் வருவதாலும் தமிழ்நாட்டு அரசியல் சூடு பிடிக்கவில்லை என நினைக்கிற மேலிடம் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் பின்தங்குகிறதோ என யோசிப்பதாகச் சொல்கிறார்கள். இதற்காகவே ஓபிஎஸ், தினகரனை மறுபடியும் கூட்டணிக்குள் கொண்டுவருகிற பொறுப்ப அண்ணாமலையிடம் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதைப்பற்றி பேச இரண்டு முறை டெல்லிக்கு சென்று வந்த அண்ணாமலைக்கு தேர்தல் நெருக்கத்தில் முக்கியமான பொறுப்பையும் கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்த ஒன்பதாம் தேதி சென்னையில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை நயினார் நாகேந்திரன் சந்தித்துப்பேசினார். கூட்டணியை வலுப்படுத்துவதற்காகத் தான் சென்னை, டெல்லி சந்திப்புகள் நடந்தது என்கிறவர்கள் குறிப்பாக அதிமுக பொது குழு நடப்பதற்கு முதல் நாள் இந்த சந்திப்புகள் நடந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஓ.பி.எஸ் கூட்டணிக்கோ, அதிமுகவுக்கோ தயாராக இருக்குற நிலையில் டிடிவி.தினகரன் மட்டும் இன்னும் முழுமையாக சம்மதிக்கவில்லை என்கிறார்கள். ஆனால், அவரையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதுதான் பாஜகவில் அஜெண்டா. இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்., டிடிவி.தினகரனை எந்த ரூபத்திலும் கட்சியிலோ, கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை திட்டவட்டமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அமித் ஷா சென்னைக்கு வரும்போது ஒருங்கிணைப்பு சாத்தியமாகும், பிரச்சாரத்தை தொடங்கலாம் என்கிறது பாஜக வட்டாராம்.

இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப்பேசினார் நயினார் நாகேந்திரன். அப்போது ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடன் டெல்லி மேலிடம் கூறியதை எடுத்துச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.