ஓ.பி.எஸ் அப்செட்..! அமித் ஷா- விஜய்க்கு லாக்..! புதுக்கணக்கு போடும் இபிஎஸ்..!
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் இடைத்தேர்தலும் நடந்தது. அதில் மோசமான தோல்வியை அதிமுக சந்தித்திருந்தால் அப்படியே ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால் பல சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பாஜகவை கூலாக்குவது போல் சில தீர்மானங்கள் இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் எஸ்.ஐ.ஆர் பணிகளை ஆதரித்து இருந்தது. இண்டாவது நீதித்துறையை மதிக்காத திமுக என திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஒட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இப்படி சில விஷயங்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சில அதிர்ச்சி மெசேஜ்களையும் கொடுத்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதில் முதன்மையான ஷாக் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். நேற்று கூட ஒருங்கிணைந்த அதிமுக தான் நல்லது, ஒருங்கிணைப்பார்கள் என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் வாய்ப்பில்லை என எல்லாவற்றுக்கும் கேட்டை இழுத்து மூடிவிட்டார்கள். அவர் மட்டுமல்ல. சசிகலா உள்ளிட்ட யாரையும் இணைப்பது குறித்து எந்தவிதமான பாசிட்டிவான சிக்னல்களும் கொடுக்கப்படவில்லை. இது அப்செட். இன்னொரு பக்கம் உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 10ஆம் தேதி பிறகு பார்த்துக்கலாம் என ஏற்கனவே ஓபிஎஸிடம் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது. அவர்களும் இதை எதிர்பார்த்ததுதான் இருந்தாலும், சரி, இந்த விவகாரத்தில் வேறொரு முயற்சி எடுக்கலாம் என அமித் ஷா யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதைவிட பெரிய ஷாக் என்னவென்றால் அதிமுக இயற்றிய தீர்மானங்களில் முக்கியமானது. தமிழ்நாட்டில் கூட்டணி தலைமை அதிமுக தான். முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி தான். அவர்தான் இந்த தேர்தலை முன்னெடுப்பார் எனவும் தீர்மானம் இயற்றியிருந்தார்கள். இன்னொருவரான விஜய்க்கும் மெசேஜ் கொடுத்திருக்கிறார்கள்.
விஜய் தரப்பும் இதை எதிர்பார்த்ததுதான் என நினைக்கிறார்கள். இங்கு அதிமுக கூட்டணியில் தலைமை முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி தான் எனக் ஏற்கெனவே கூறி வருகிறது. ஏற்கனவே தவெகவில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என குறிப்பிட்டு இருந்தார்கள். ஆகையால் இந்த கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு என தவெகவ்வுக்கு மெசேஜ் தட்டி விட்டு இருக்கிறார்கள். இந்த பொதுக்குழுவில் இறுதியில்பேசி முடிக்கிற போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வரும். நம்முடைய தலைமையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதிமுக ஆட்சி அமைக்கும் எனமூச்சுக்கு 300 தடவை அதிமுகதான் என குறிப்பிட்டு பேசியிருக்கிறார் எடப்பாடியார். ஆனால், சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த கூட்டம் வரை உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என பதிவு செய்து பேசிக் கொண்ட்டிருந்தார்.
தமிழகத்தில் எங்களுடன் கூட்டணி இருக்கலாம். ஆனால், இங்கே தலைமையில் இருப்பதோ, ஆட்சி பொறுப்புக்கு வருவதோ அதிமுக தான். அமைச்சரவையில் பங்கு இல்லை என மறைமுகமாக, அதேவேளை அழுத்தமாக சுட்டிக் காட்டி இருக்கிறார் எடப்பாடியார் என்கிறார்கள் அதிமுக சீனியர் நிர்வாகிகள். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை திரும்பத் திரும்ப முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அட்டாக் செய்து வருகிறார். அடிமைகள் எனச் சொல்லி வருகிறார். ஏற்கனவே நீங்க கூட்டணி வைத்திருந்தீர்களே? அப்படியானால் நீங்கள் அடிமையா? என திமுகவை அட்டாக் செய்தார் எடப்பாடியார். இப்படி பாஜகவோடு கூட்டணி வைத்ததற்கு ஆதரவாக தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார் எடப்பாடியார். ஆனாலும், அது தேர்தல் வெற்றிக்காக, திமுகவை தோற்கடிக்கத்தான். மற்றபடி தமிழ்நாட்டில் அதிமுகவின் வழித்தடத்தில் தான் கூட்டணி கட்சிகள் வரவேண்டும். அதுதான் வெற்றிக்கு சாத்தியம் என அழுத்தம், திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் எடப்பாடியார்.
ஆனால், எடப்பாடி பழனிசானி சொல்வதில் இருந்தே இதற்கு ஒரு பதில் இருக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் இடைத்தேர்தலும் நடந்தது. அதில் மோசமான தோல்வியை அதிமுக சந்தித்திருந்தால் அப்படியே ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால் பல சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அந்த சட்டமன்ற தொகுதிகள் இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடந்தது. அந்தத் தேர்தலில் அந்த தொகுதிகளில் எம்பிக்கு போடப்பட்ட வாக்குகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றது. ஆனால், யார் எம்எல்ஏ என்கிற விஷயத்தில் அதிமுக வெற்றி பெற்றது என்பதையும் ஒரு இடத்தில் கோடிட்டு காட்டினார் எடப்பாடி.
பாஜக கூட்டணியில் இருந்ததால்தான் அப்போது மக்கள் எம்பிக்களை செய்யவில்லை. இன்னொரு பக்கம் 2021ல் தேர்தலில் அதிமுக ஆட்சி மக்கள் கொடுக்கவில்லை. இந்த முறையும் பாஜக கூட்டணியில் வருகிறார்கள் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜகவுக்கு வேண்டுமானால் அது பிளஸாக இருக்கலாம். அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு போகும். அதிமுகவை பொருத்தவரைக்கும் அது மைனஸாகத்தான் இருக்கும் என திமுக தரப்பு ஆதரவாளர்கள் தங்களுக்கு பாசிட்டிவாக பேசி வருகிறார்கள். இதுதான் அதிமுகபொதுக்குழு கூட்டத்தை சுற்றி நடந்து கொண்டிருக்கிற விஷயங்களாக இருக்கிறது.
