MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • Vijay - Sangeetha: மாறும் அரசியல் களம்.! விஜய்க்காக வாக்கு சேகரிக்க வரும் சங்கீதா.?! தளபதிக்காக களம் இறங்கிய குடும்ப உறவுகள்.!

Vijay - Sangeetha: மாறும் அரசியல் களம்.! விஜய்க்காக வாக்கு சேகரிக்க வரும் சங்கீதா.?! தளபதிக்காக களம் இறங்கிய குடும்ப உறவுகள்.!

தமிழக அரசியலில் விஜய் தொடங்கியுள்ள தவெக பெரும் அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடும்ப உறவுகளின் சமரசமும், சங்கீதாவின் அரசியல் வருகையும் ஆளுங்கட்சியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, தேர்தல் களத்தை அதிரவைத்துள்ளது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 02 2026, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
விஜய்க்காக களத்தில் குதிக்கும் உறவுகள்.!
Image Credit : Asianet News

விஜய்க்காக களத்தில் குதிக்கும் உறவுகள்.!

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆளுங்கட்சிக்குச் சவால் விடும் வகையில் வளர்ந்து வரும் நிலையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளும், அதைத் தொடர்ந்து குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளும் தற்போது பேசுபொருளாகியுள்ளன. "விஜய்க்காக அவரது குடும்பமே களம் இறங்குகிறது" என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.

26
சங்கீதா அளித்த புகார்: பின்னணி என்ன?
Image Credit : Asianet News

சங்கீதா அளித்த புகார்: பின்னணி என்ன?

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருவது விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனு குறித்த செய்திகள்தான். சுமார் 26 ஆண்டு கால திருமண வாழ்க்கையில், கடந்த சில ஆண்டுகளாக விஜய் தன்னிடம் காட்டிய அலட்சியம் மற்றும் ஒரு நடிகையுடனான தொடர்பு குறித்த புகார்களைச் சங்கீதா முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தத் தனிப்பட்ட விரிசல் விஜய்யின் அரசியல் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என அவரது எதிர்த்தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

Related Articles

Related image1
திமுக கோட்டையில் ஓட்டை போடுவாரா விஜய்? தளபதியின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் அந்த ஒரு தொகுதி!
Related image2
கம்முன்னும், உம்முன்னும் இருக்கும் விஜய்.! இதுதான் காரணமாம்.! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!
36
குடும்ப உறவுகளின் அதிரடி என்ட்ரி.!
Image Credit : Google

குடும்ப உறவுகளின் அதிரடி என்ட்ரி.!

சமரசப் பேச்சுவார்த்தை விஜய் மற்றும் சங்கீதா இடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிளவைச் சரிசெய்ய விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகியோர் தீவிரமாக முயன்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் தங்களது பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சஞ்சய் தனது தாய்க்கு ஆதரவாக இருந்தாலும், குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். 

46
சங்கீதாவின் மனமாற்றம்.!
Image Credit : instagram

சங்கீதாவின் மனமாற்றம்.!

பிள்ளைகளின் அன்பு மற்றும் பெரியவர்களின் அறிவுரை காரணமாக சங்கீதா தனது முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், இதனால் அவர் மீண்டும் விஜயுடன் இணைய வாய்ப்புள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

56
வாக்கு சேகரிக்க வரும் சங்கீதா? அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!
Image Credit : instagram

வாக்கு சேகரிக்க வரும் சங்கீதா? அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!

இந்தச் சமரச முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்தால், சங்கீதா மீண்டும் விஜயுடன் இணைந்து தவெக-வின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்கீதா மேடையேறி விஜய்க்காக வாக்கு சேகரித்தால், அது "குடும்பப் பிணைப்பு" கொண்ட தலைவர் என்ற பிம்பத்தை விஜய்க்கு வழங்கும். விஜய்யின் தனிப்பட்ட பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்ய நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு, குடும்பத்தின் இந்த ஒன்று கூடல் ஒரு பெரிய பின்னடைவாக அமையும். சங்கீதா மற்றும் ஷோபா ஆகியோரின் வருகை பெண் வாக்காளர்களின் வாக்குகளை தவெக பக்கம் இழுக்க உதவும் ஒரு துருப்புச் சீட்டாகப் பார்க்கப்படுகிறது.

66
 தவெக தொண்டர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.!
Image Credit : facebook

தவெக தொண்டர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.!

அரசியல் மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் வேளையில், விஜய்க்கு அவரது குடும்பமே அரணாக நிற்பது தவெக தொண்டர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. சங்கீதா - விஜய் இடையிலான மனக்கசப்புகள் நீங்கி, அவர்கள் மீண்டும் இணைவது விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஒரு மிகப்பெரிய "பூஸ்ட்" ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வரும் 2026 தேர்தல் களம், கொள்கை ரீதியாக மட்டுமல்லாமல், குடும்ப ஒற்றுமை ரீதியாகவும் விஜய்க்கு ஒரு வெற்றிகரமான களமாக அமைய வாய்ப்புள்ளது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!
Recommended image2
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் தரிசனம்.. வேட்டி, சட்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து முருக பக்தராய் மாறிய மோடி!
Recommended image3
நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்..! குப் என்று வாடை அடித்ததாக நக்கீரன் கோபால் கடும் குற்றச்சாட்டு
Related Stories
Recommended image1
திமுக கோட்டையில் ஓட்டை போடுவாரா விஜய்? தளபதியின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் அந்த ஒரு தொகுதி!
Recommended image2
கம்முன்னும், உம்முன்னும் இருக்கும் விஜய்.! இதுதான் காரணமாம்.! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved