Dec 12 Magara Rasi Palan : டிசம்பர் 12, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
டிசம்பர் 12, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். அவசர முடிவுகளை தவிர்த்து விடுங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நடைமுறைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் வேலை அல்லது பொது வாழ்க்கையில் புதிய பொறுப்புக்களை ஏற்க நேரிடலாம் நாள் முழுவதும் சற்று மந்தமாகவும் சோர்வாகவும் உணர வாய்ப்பும் உள்ளது
நிதி நிலைமை:
இன்றைய தினம் பணப்புழக்கம் சீராக இருக்கும் எனினும் அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் முதலீடுகள் குறித்து நிபுணர்களின் ஆலோசனை கேட்பது நல்லது பிறருக்கு கடன் கொடுப்பது அல்லது வாங்குவதை ஒத்தி வைப்பது நல்லது சேமிப்பு திட்டங்கள் பற்றி இன்று சிந்திக்கத் தூண்டும் நாளாக இருக்கும்
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் பொழுது தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும் பேச்சில் நிதானத்துடன் இருக்கவும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சலசலப்புகள் வரலாம் ஆனால் அது உடனடியாக மறைந்து போகும் குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள் பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்
பரிகாரங்கள்:
இன்று விநாயகர் பெருமானுக்கு அருகம்புல் சாட்சி வழிபடுவது நல்லது. அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்று வழிபடலாம் இயலாதவர்கள் அல்லது வயதானவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் வெள்ளை நிற உணவுகளை உட்கொள்வது நல்லது ஓம் நமோ நாராயண மந்திரத்தை 11 முறை உச்சரிக்கலாம்
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.


