- Home
- Astrology
- Marriage Horoscope 2026: 2026-ல் இந்த 5 ராசிகளுக்கு கண்டிப்பா திருமணம் நடக்கும்.! 90'ஸ் கிட்ஸ் ரெடியா இருங்க.!
Marriage Horoscope 2026: 2026-ல் இந்த 5 ராசிகளுக்கு கண்டிப்பா திருமணம் நடக்கும்.! 90'ஸ் கிட்ஸ் ரெடியா இருங்க.!
2026 puthandu palangal: 2026 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரவுள்ளது. நீண்ட காலமாக திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வாழ்க்கை அமைய இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

2026-ல் திருமணம் நடக்கவுள்ள 5 ராசிகள்
2025 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. 2026 ஆம் ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகின்றனர். வரவிருக்கும் ஆண்டு என்னென்ன மாற்றங்களையும், வாய்ப்புகளையும் கொண்டுவரும் என்பதை அறிய பலரும் ஆவலாக உள்ளனர். 2026 ஆம் ஆண்டு பல கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்ற இருக்கின்றன. இதன் காரணமாக உருவாகும் சுபயோகங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை கொண்டு வர உள்ளது. குறிப்பாக காதல், உறவுகள், செல்வம், ஆடம்பரம் ஆகியவற்றை குறிக்கும் சுக்கிர பகவான் 2026 ஆம் ஆண்டு பலமுறை தனது நிலையை மாற்ற இருக்கிறார்.
சுக்கிர பகவானின் இந்த பெயர்ச்சியானது பல ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்க உள்ளது. நீண்ட காலமாக திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் நேர்மறையான மாற்றங்களும், மகிழ்ச்சியும், அன்பும் அதிகரிக்க இருக்கிறது. இந்த பதிவில் 2026 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் சுக்கிரன் சுப ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் 2026 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கைகூடும். ஜனவரி மாதம் சுக்கிரன் ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். ஜோதிடத்தின்படி மார்ச் மாதம் மேஷ ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். விரும்பிய வாழ்க்கை துணையை அடைவதற்கான யோகம் உருவாகும். படித்த, ஒழுக்கமுள்ள, புத்திசாலித்தனம் மிக்க துணையை திருமணம் செய்து கொள்வீர்கள். இந்த ஆண்டின் முதல் பாதிக்குள் திருமணம் தொடர்பான நல்ல செய்திகளை கேட்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். புத்தாண்டு முதல் வீட்டில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச் 26 ஆம் தேதி சுக்கிர பகவான் பெயர்ச்சி அடைய இருக்கிறார். எனவே இந்த காலகட்டம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். உங்களின் நீண்ட கால கனவு நினைவாகும். உங்கள் ஆசைகள் நிறைவேறும். கஷ்டங்கள் அனைத்தும் தீரும். திருமணம் குறித்த நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளும் ஒருவரை வாழ்க்கைத் துணையாக பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கடகம்
புத்தாண்டு கடக ராசிக்காரர்களின் வாழ்வில் புதிய ஒளியை கொண்டு வரும். கடக ராசிக்காரர்கள் இதுவரை அனுபவித்து வந்த தனிமை இந்த ஆண்டுடன் முடிவடைய வாய்ப்பு உள்ளது. உங்கள் இதயம் விரும்பும் பொருத்தமான துணையை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஏப்ரல் 19ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷப ராசியில் நுழைவது கடக ராசிக்காரர்களுக்கு திருமண யோகத்தை உருவாக்கும். கடக ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பிய நபரையே திருமணம் செய்து கொள்வார்கள். உங்கள் மனதிற்கு பிடித்த, உங்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லும் நல்ல வாழ்க்கைத் துணை உங்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கும்.
துலாம்
மார்ச் 26 2026 அன்று சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இது துலாம் ராசிக்கு ஏழாவது வீடாகும். இந்த வீடானது குடும்பம், கணவன், மனைவி, திருமண உறவுகளை குறிக்கிறது. இந்த வீட்டில் சஞ்சரிப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க முடியும். பணக்கார மற்றும் புத்திசாலித்தனம் மிகுந்த வாழ்க்கைத் துணையை மணக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்க்கைத் துணையை இந்த ஆண்டில் நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. மார்ச் 26 ஆம் தேதி சுக்கிரனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான நிலையை உருவாக்குகிறது. எனவே மார்ச் மாதத்தில் உங்களுக்கு திருமண யோகம் கிடைக்கும். திருமணம் குறித்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். சுக்கிரனின் சிறப்பு அருளால் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாறுவீர்கள். நீங்கள் விரும்பும் நபரை அல்லது உங்களுக்கு பொருத்தமான துணையை கண்டறியும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணை உங்கள் வாழ்வில் புதிய ஒளியை கொண்டு வருவார்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

