- Home
- Astrology
- ஒரே ராசியில் இணையும் மும்மூர்த்திகள்.! திரிகிரக யோகத்தால் தை முதல் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்.!
ஒரே ராசியில் இணையும் மும்மூர்த்திகள்.! திரிகிரக யோகத்தால் தை முதல் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்.!
Trigraha Yog 2026: 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சனி பகவானின் சொந்த ராசியில் மூன்று கிரகங்கள் குடியேற உள்ளன. இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திரிகிரக யோகம் 2026
ஜோதிடத்தின்படி ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் இணைவது திரிகிரக யோகம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி மாதம் சனிக்கு சொந்தமான மகர ராசியில் மூன்று கிரகங்கள் இணைய இருக்கின்றனர். ஜனவரி 13, 2026 அன்று சுக்கிர பகவான் மகர ராசிக்குள் நுழைய இருக்கிறார். அதற்கு அடுத்த நாள் ஜனவரி 14, 2026 சூரியனும், ஜனவரி 17, 2026 அன்று புதன் பகவானும் மகர ராசிக்குள் நுழைகின்றனர். இதன் காரணமாக ஏற்படும் திரிகிரக யோகத்தால் சில ராசிக்காரர்கள் நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியை சனி பகவானின் நண்பனான சுக்கிர பகவான் ஆட்சி செய்கிறார். சனி பகவானின் சொந்த ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் ரிஷப ராசிக்கும் நன்மைகளைத் தரும். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். பல மூலங்களிலிருந்தும் உங்களுக்கு பணம் வரும். வங்கி இருப்பு வேகமாக அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பத்தில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். சொந்த வீடு, வாகனம், நிலம், மனை போன்ற சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள்.
துலாம்
திரிகிரக யோகம் உருவாவது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல காலங்களை அளிக்கும். வாழ்க்கையில் செல்வமும், ஆடம்பரமும் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் அல்லது வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் முன்னேற்றம் சாத்தியமாகும். தொழிலதிபர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவீர்கள். சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். விவசாயம் செய்து வருபவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். நிதி ஆதாயங்களுக்கு வலுவான வாய்ப்புகள் உண்டு. திடீர் பண வரவுகள் கிடைக்கக்கூடும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். வீட்டில் உள்ளவர்கள் உங்களை கவனித்துக் கொள்வார்கள். உங்கள் வார்த்தைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி காணப்படும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். புதிய வீடு வாங்குதல், பழைய வீட்டை புதுப்பித்தல் அல்லது அலங்கரித்தல் போன்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் திரிகிரக யோகம் உருவாகிறது. எனவே மகர ராசிக்காரர்களுக்கு இது பல வழிகளில் நன்மைகளைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடி வரும். திடீர் தொழில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய வாய்ப்புகள் உருவாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமணமானவர்களுக்கு தகராறுகள் நீங்கி அற்புதமான வாழ்க்கை அமையும். அதிர்ஷ்டம் கூடும். சமயோசிதமாக செயல்பட்டு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்பவர்களுக்கு சாதகமான நேரம். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தடைபட்டிருந்த வேலைகள் மீண்டும் ஆரம்பமாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

