MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • முக்கிய ராசிக்கு பெயர்ச்சியான செவ்வாய் பகவான்.! அடுத்த 40 நாட்களுக்கு இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.!

முக்கிய ராசிக்கு பெயர்ச்சியான செவ்வாய் பகவான்.! அடுத்த 40 நாட்களுக்கு இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.!

செவ்வாய் பகவான் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ள நிலையில், அடுத்த 40 நாட்களுக்கு சில ராசிக்காரர்களுக்கு செல்வமும், அதிர்ஷ்டமும் குவியும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Dec 11 2025, 11:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
செவ்வாய் பெயர்ச்சி 2025
Image Credit : Asianet News

செவ்வாய் பெயர்ச்சி 2025

ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். தைரியம், வீரம், ஆற்றல், துணிவு ஆகியவற்றின் காரகராக விளங்கும் அவர், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருக்கிறார். குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்கு செவ்வாய் நுழைவது என்பது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற உள்ளனர். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

26
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

தனுசு ராசியில் செவ்வாய் நுழைவது கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கும்ப ராசியின் 11 வது வீட்டில் செவ்வாய் பகவான் பெயர்ச்சியாக இருக்கிறார். 11-வது வீடு லாப ஸ்தானம் என்பதால், இந்த நேரத்தில் கும்ப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். அவர்கள் விரும்பிய அனைத்தும் நடக்கும். பெற்றோர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். நிதி ரீதியான நன்மைகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கிடைக்கலாம். தாமதமாகி வந்த சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

Related Articles

Related image1
Rahu Peyarchi: 2026-ல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் ராகு பகவான்.! கடும் இழப்புகளை சந்திக்கப்போகும் 6 ராசிகள்.!
Related image2
குரு பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகம்.! 2026-ல் அளவில்லாத நன்மைகளைப் பெறவுள்ள ராசிகள்.!
36
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களின் புத்திசாலித்தனம், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவ குணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடனான உறவுகள் மேம்படும். மாணவர்கள் கல்வி மற்றும் பிற துறைகளில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலைகளில் உள்ளவர்களுக்கு ஏற்றம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் திறக்கப்படும். பெரியவர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

46
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் சஞ்சாரம் எதிர்பாராத லாபங்களைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வெளிநாடு பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படலாம். வருமானம் கணிசமாக அதிகரிக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் குறித்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றியைப் பெறுவீர்கள். சிறிய முயற்சிகள் கூட பெரிய பலன்களைத் தரும்.

56
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசியின் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் இருப்பது மிகவும் சாதகமான சூழலை உருவாக்கும். குறிப்பாக உடன் பிறந்தவர்கள், சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். சொத்து சேரும் வாய்ப்புகளும் உண்டு. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் தைரியமாக முதலீடு செய்தால் லாபகரமான பலன்களை எதிர்பார்க்கலாம். இருப்பினும் இந்த காலகட்டத்தில் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

66
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசியின் பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் இந்த காலகட்டத்தில் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறலாம். பதவி உயர்வு, விருதுகள், நல்ல வருமானம், சொத்துக்கள், லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவுகள் மேம்படும். அரசியல், அரசுத் துறைகள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு அதிர்ஷ்டம் வலுவாக இருக்கும். மாணவர்களுக்கும் இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பணம் தேடி வரும்... பதவி உயர்வு நிச்சயம்! - புதன் நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த 4 ராசிகள்!
Recommended image2
Dwidwadash Yoga 2026 : ஏப்ரலில் 5 முறை உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! ஒரே இரவில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.!
Recommended image3
Tamil Puthandu 2026 : தமிழ் புத்தாண்டில் மேஷத்தில் உருவாகும் குபேர யோகம்.! இந்த 4 ராசிகளுக்கு லட்சாதிபதியாகும் யோகம் கிடைக்கும்.!
Related Stories
Recommended image1
Rahu Peyarchi: 2026-ல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் ராகு பகவான்.! கடும் இழப்புகளை சந்திக்கப்போகும் 6 ராசிகள்.!
Recommended image2
குரு பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகம்.! 2026-ல் அளவில்லாத நன்மைகளைப் பெறவுள்ள ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved